ஓமன் கடல் பகு​தி​யில் கடந்த சில நாட்​களாகவே பதற்​றம் நீடித்தது. இந்​திய மாலுமிகள் சென்ற 3 எண்​ணெய் கப்​பல்​கள், எச்சரிக்​கையை மீறி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முயன்றதால் அவற்​றின் மீது அமெரிக்​கப்​படை தாக்​குதல் நடத்தி முடக்​கியது. இதில் ஒரு கப்​பலில் 3 இந்​திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்​நிலை​யில் ஓமன் கடல் பகு​தி​யில் இருந்து 80 நாட்​டிக்​கல் மைல் தொலை​வில் எம்​எஸ்வி விராட் 1 என்ற இந்​திய கப்​பலில் இன்​ஜின் பழுதடைந்​து...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தம் இறுதியான சூழலில் லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு...
ஸ்பேஸ் எக்​ஸ், டெஸ்​லா, நியூரோ லிங்க், தி போரிங் கம்​பெனி, எக்ஸ் ஏஐ, எக்ஸ் வலை​தளம் உள்​ளிட்ட பல நிறுவனங்களை உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள எலான் மஸ்க் நடத்தி வரு​கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.95 லட்​சம் கோடி​யாக உள்​ளது. உலகின் மிகப்​பெரிய கோடீஸ்​வர​ராக இருந்​தும் அமெரிக்​கா​வின் டெக்சாஸில் உள்ள போகா சிகா பகு​தி​யில் உள்ள 400 சதுர அடி வீட்​டில் வசிக்கிறார். அந்த வீட்டில்...
 இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. போர் பதற்றம் தீவிரமடைந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு, அமைதிக்கான பாதையில் வெளிச்சத்தைக் கூட்டி இருக்கிறது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் ஈரான் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. எதிர்பாராத இந்த திடீர் மோதல் மேற்கு ஆசியாவின் நிலைமையை மீண்டும் சிக்கலாக்கும் என்ற அச்சம் பரவலாக...
துபாயில் திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில், இந்திய தொழிலாளர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  பழுதடைந்து சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்த லாரி ஒன்றின் பின்புறத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து அதிவேகமாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. துபாய் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது சாலையின் நடுவிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது அந்த லாரியின்...
தெற்கு பிலிப்பைன்ஸில் நேற்று 7.8 ரிக்​டர் அளவி​லான சக்​தி​வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​ட​தில் 32 பேர் உயி​ரிழந்​தனர். தெற்கு பிலிப்​பைன்​ஸின் மிண்​ட​னாவோ பிராந்​தி​யத்​தில் நேற்று காலை 7:37 மணிக்கு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. 7.8 ரிக்​டர் அளவி​லான இந்த நிலநடுக்​கம் இந்த ஆண்டு பிலிப்​பைன்ஸை தாக்​கிய மிக வலு​வான நிலநடுக்​கம் என கூறப்படுகிறது. இந்த நிலநடுக்​கம் பிலிப்​பைன்​ஸின் 2-வது அதிக மக்​கள் தொகை கொண்ட தீவான மிண்​டனாவோவுக்கு அப்​பால் கடலில் மையம் கொண்​டிருந்​த​தாக​வும்...
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்துவதால், இஸ்​ரேல் விமான தளங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஈரான் நகரங்​களில் இஸ்​ரேல் போர் விமானங்​கள் குண்டு வீசின. இரு தரப்பு இடையே மீண்​டும் தீவிர போர் ஏற்​படும் சூழல் ஏற்​பட்​ட​தால், ஈரான் மற்​றும் இஸ்​ரேல் தாக்​குதலை நிறுத்த அதிபர் ட்ரம்ப் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். லெப​னான் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடத்தி வரு​வ​தால், அமெரிக்கா -...
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அறிவிப்பை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது ட்ரம்ப்புக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது. அமெரிக்​கா​வில் வெளி​நாட்​டினர் தற்​காலிக​மாக தங்கி வேலை செய்​வதற்​காக எச்​-1பி விசா வழங்​கப்​படு​கிறது. குறிப்​பாக, தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் (ஐ.டி.) திறமை​யான வெளி​நாட்டு ஊழியர்​களை பணி​யமர்த்த இந்த விசா பயன்​படு​கிறது. குலுக்​கல் முறை​யில் இந்த விசா புதிய விண்ணப்பதாரர்களுக்கு...
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாஸ் அராக்சி, “உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாகவோ அல்லது சந்திப்பை விரும்புவதாகவோ டொனால்டு ட்ரம்ப் கூறியதாக நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். அவர் யதார்த்தத்துடன் இருக்க வேண்டும்....
‘‘​நாட்டு நலன் கரு​தியே இந்​தியா செயல்​படு​கிறது. அதற்​குப் பொருளா​தார தடைகள் மூலம் அழுத்​தம் கொடுத்​தால், அது பிரதமர் மோடி தலை​மை​யின் கீழ் பூம​ராங் போல் திரும்பி தாக்​கும்’’ என அமெரிக்கா​வுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். ரஷ்​யா​வின் செயின்ட் பீட்​டர்ஸ் சதுக்​கத்​தில் நடை​பெற்ற சர்​வ​தேச பொருளா​தார கூட்​டமைப்​பில் பங்​கேற்ற ரஷ்ய அதிபர் புதின் பேசி​ய​தாவது: இந்​தியா தனது நாட்டு நலனை கருத்​தில் கொண்டு முடிவு​களை எடுக்​கிறது. ரஷ்​யா​வுடன் உள்ள உறவு​கள்...