இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லெட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் மீண்டும் வைரலாகி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, இறுதியாக செவ்வாய்க்கிழமை மாலை ரோம் நகர் சென்றடைந்தார். அங்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இருவரும் இணைந்து இரவு உணவு சாப்பிட்டனர். அதைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கொலோசியம்...
இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா வழித்தட கனவு நனவாகும்: பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தகவல்
admin - 0
பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இத்தாலி தலைநகர் ரோமுக்கு சென்றார். இதையொட்டி பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம், இரு நாடுகளிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கிறது.
இரு நாடுகள் இடையே பாதுகாப்பு மற்றும் விண்வெளி, தூய்மையான தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள், வாகன உதிரிபாகங்கள், ரசாயனங்கள்,...
“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப். ஈரான் அரசுக்கு எதிரான தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஈரானின் அதிதீவிரவாதத் தலைமை ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற அமெரிக்கா அனுமதிக்காது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், "இந்த நடவடிக்கை...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது முதலீட்டு ஆலோசகர்கள் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தக பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இதில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்த பங்கு வர்த்தகத்தை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப, நிதி, ஏரோஸ்பேஸ் மற்றும் ஊடக நிறுவனத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த விவரத்தை முன்னணி செய்தி...
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டும் என்ற கருத்தை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் வெளிப்படுத்தியுள்ளார். கண்ணியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை அவசியம் என்றும், ஈரான் தனது தேசிய உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரானிய மாணவர் செய்தி நிறுவனம் (ISNA) வெளியிட்ட செய்தியில், நிர்வாக அமைப்புகளின் மக்கள் தொடர்பு கூட்டத்தில் பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், “பேச்சுவார்த்தை நடத்த மறுப்பது அறிவுப்பூர்வமானதல்ல. நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என்று...
மேற்கு ஆசியா, உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரதமர் மோடி வலியுறுத்தல்
admin - 0
மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றம் ராஜதந்திரத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
நார்வே நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்பு உறவு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவும் நார்வேயும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. எந்தவொரு...
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமைதித் திட்டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய தூதராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் மூலமாக இந்தத் திட்டம் பகிரப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில்,...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தாம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பின்னால் வெளிநாட்டுச் சதி இருப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இதற்கு வலுச் சேர்க்கும் விதமாக, ரகசிய அரசு தூதரக ஆவணம் ஒன்று தற்போது கசிந்துள்ளது பாகிஸ்தானில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘சைபர்' என்று அழைக்கப்படும் இந்த ஆவணம், மார்ச் 2022-ல் அமெரிக்காவுக்கான அப்போதைய பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் கான் மற்றும் அமெரிக்க தூதர் டொனால்டு லூ ஆகியோருக்கு...
ரஷ்யா மீது இன்று (ஞாயிறுக் கிழமை) உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில், ஒரு இந்திய தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
ரஷ்யா மீதான இந்த ட்ரோன் தாக்குதலில் ஒரு இந்தியத் தொழிலாளி உள்பட 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், சிலர் காயமடைந்தனர். இரவு முழுவதும் நடந்த இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை...
அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக முடிவெடுக்காவிட்டால் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், "ஈரானுக்கான நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் விரைவாகச் செயல்படுவது நல்லது. இல்லையெனில் அவர்களது நாட்டில் எதுவும் மிஞ்சாது. இந்தத் தருணத்தில் காலம் மிக முக்கியமானது" என்று மிகக் கடுமையான தொனியில்...









