மூன்றாம் உலகப் போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் வுலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்.24-ம் தேதி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இன்றுடன் போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு பிபிசி செய்தி நிறுவனத்துக்கு தான் அளித்த பேட்டியின் சுருக்கத்தை, வுலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது: ‘வான் பாதுகாப்பு என்பது...
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்றவில்லை என்றும், தனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதின் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் ஆட்சியாளரான முகமது யூனுஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிபர் முகமது ஷஹாபுதின் முன்வைத்துள்ளார்.
அதிபர் மாளிகையில், வங்காள நாளிதழான...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு புதிய வரி விகிதங்கள அறிவித்தார். இதை எதிர்த்து அமெரிக்க குறு, சிறு நிறுவனங்கள் மற்றும் 12 மாகாண அரசுகள் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இரு கீழமை நீதிமன்றங்களில் அதிபர் ட்ரம்பின் புதிய வரி விகிதங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த...
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் இன்று (பிப்.22) அதிகாலை விடியல் பொழுதுக்கு முன்பாக பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொண்டு ரஷ்யா மிக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
முன்னதாக, இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கீவ் நகரில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் சப்தத்தை கேட்டதாக தெரிவித்தனர். அதற்கு முன்பாக வான்வழி...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் இதுவரை ரூ.18 லட்சம் கோடி வரி வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தொகையை அமெரிக்க அரசு திருப்பி வழங்காது என்று அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தும் மாகாணங்களின் அரசுகள், கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப்புக்கு இலினாய்ஸ் மாகாண ஆளுநர் பிரிட்ஸ்கர் அனுப்பியுள்ள கடிதத்தில்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொள்கைகள் மீது 60 சதவீதம் பேர் அதிருப்தி கொண்டிருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசின் கொள்கைகள் குறித்து ஏபிசி நியூஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை இப்சோஸ் நிறுவனத்தின் அறிவுத்திறன் குழுவினருடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்தியது.
அமெரிக்காவின் பண வீக்கம், மற்ற நாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதி வரி, வெளிநாட்டு உறவுகள் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் இந்த கருத்துக்கணிப்பு அமெரிக்க மக்களிடம்...
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் அடிக்கடி பாகிஸ்தான் விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென நங்கர்ஹார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கரத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள்...
மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஈரானின் பொருளாதார வீழ்ச்சி, மதக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக, இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. மக்களின் போராட்டத்தை...
“இந்தியா, பாகிஸ்தானுக்கு 200% வரி விதிப்பேன் என கூறி போரை நிறுத்தினேன்” – ட்ரம்ப் புதிய ‘தகவல்’
admin - 0
“200 சதவீதம் வரி விதிக்கப்படும் எனச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தினேன்” என்று வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய அமைப்பின் (போர்டு ஆஃப் பீஸ்) நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.
“இந்த நிகழ்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் பேசினேன். இதை கேட்டு அவர் உற்சாகம் அடைந்தார். அவர் இந்த நிகழ்வை காணொலியில் பார்த்திருப்பார். (இந்த அமைப்பில் இணையாத இந்தியா,...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 14 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், பஜாவுர் மாவட்டத்தில், தீவிரவாதிகள் நேற்று முன்தினம் மாலை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை ஒரு சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள ஒரு கல்லூரியின் சுவரில் மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ஒரு சிறுமி கொல்லப்பட்டதாக ராணுவம்...










