பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் முன்னாள் அதிகாரியான அவர், இந்திய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் அரசுடனான அமெரிக்காவின் உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகள் இடையிலான...
அமெரிக்க வரலாற்றில் பெண் அதிபர் நிச்சயம் இடம்பிடிப்பார் என தான் எதிர்பார்ப்பதாக ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அண்மையில் சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் இது குறித்து பேசியுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அப்போதைய அதிபர் ஜோ பைடன் பாதியில்...
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சிகம் லூவ்ரே.
கடந்த வாரம் கிரேன் ஒன்றின் உதவி மூலம், மியூசியத்தின் மேல்மாடி ஜன்னல் வழியாக நுழைந்த கொள்ளையர்கள் மன்னர் நெப்போலியன் காலத்து கிரீடம் மற்றும் பிரெஞ்சு ராணிகள் அணிந்த நெக்லஸ் உட்பட 8 விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இவற்றின் மொத்த மதிப்பு 102 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரீஸ் சிறப்பு படை...
ஆன்லைனில் பெண்களுக்கான ஜிகாதி படிப்பை ஜெய்ஷ்-இ-முகம்மது தொடங்கியுள்ளது.
காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்தியாவால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவரான மவுலானா மசூத் அசார் இந்த அமைப்பை தொடங்கினார்.
2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல், 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட கொடூர தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியுள்ளது....
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சியை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.
பிரதமரை தேர்ந்தெடுக்கும் கீழ் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) வேட்பாளர் சனே டகைச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைவிட 4 வாக்குகள் கூடுதலாக சனே டகைச்சி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிகோகோ 149 வாக்குகளைப் பெற்று தோல்வி...
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம் கடந்த செப்.25-ம் தேதி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
பிரான்ஸில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்று அதிபரானார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் அப்போதைய அதிபர் மாமர் கடாஃபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், இதற்கு பிரதிபலனாக, தனித்துவிடப்பட்ட...
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு பெற வேண்டிய எச்1 பி விசா கட்டணம் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அமைப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 2025 செப்டம்பர்-21 க்கு பிறகு புதிதாக எச்1 பி விசா கோரி விண்ணப்பிப்பவர்கள்தான் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். ஏற்கெனவே, எச்1 பி விசா மறுக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பித்தால் அவர்களும் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும்.
அதே...
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
அதிபர் ஆசிப் அலி சர்தாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இருளை ஒளி வெற்றி கொள்வதையும், தீமையை நன்மை வெற்றி கொள்வதையும் தீபாவளி அனைவருக்கும் நினைவூட்டுகிறது. நம்பிக்கை, நேர்மறை எண்ணம் மற்றும் ஒற்றுமையை இது வெளிப்படுத்துகிறது.
பாகிஸ்தானின் அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளையும் முழு மத சுதந்திரத்தையும் உத்தரவாதம்...
கடந்த எட்டு மாதங்களில் உலக நாடுகளுக்கு இடையிலான எட்டு போர்களை நிறுத்தி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நாட்டின் அதிபராக டொனல்டு ட்ரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதில் அமெரிக்காவின் வளர்ச்சி அமைந்துள்ளதாக அவர் கூறி வருகிறார். அந்த வகையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது, வெளிநாடுகள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல்...
“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 13-ம் தேதி எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
எனினும் போர் நிறுத்தம்...










