பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் ‘ஐ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், செனகல் அணியுடன் மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் செனகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. 25-வது நிமிடத்தில் செனகல் வீரர் நிக்கோலஸ் ஜாக்சன் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு, கோல்கீப்பர் மைக் மெய்னான் காலில் பட்டு வெளியே சென்றது. முதல் பாதி ஆட்டத்தில்...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காங்கோ அணிக்காக ஸ்டார்டிங் லெவனில் களம் கண்டிருந்தார் தமிழ் வம்சாவளி வீரரான சாமுவேல் முத்துசாமி. அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் காங்கோ அணிகள் இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு விளையாடின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தொடரில் சாம்பியன் படம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக...
நடப்பு உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் நேற்று ஈரான் - நியூஸிலாந்து அணி​கள் மோதிய ஆட்​டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா​வில் முடிவடைந்​தது. இப்​போட்​டி​யில் நியூஸிலாந்து அணி​யின் அட்​டாக்​கிங் மிட்ஃபீல்டரும் இந்​திய வம்​சாவளி​யு​மான சர்ப்ரீத் சிங் தொடக்க லெவனில் இடம் பெற்று 90 நிமிடங்​கள் வரை களத்​தில் விளையாடி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தார். இதன் மூலம் தொடக்க லெவனில் இடம் பெற்ற முதல் இந்​திய வம்​சாவளி வீரர் என்ற...
உல​கக் கோப்பை கால்​பந்து தொடரில் அமெரிக்காவின் அட்​லாண்டா நகரில் நேற்று முன்​தினம் ‘ஹெச்’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஸ்பெ​யின் - கேப் வெர்டே அணி​கள் மோதின. இந்த ஆட்​டம் கோல்​களின்றி டிரா​வில் முடிவடைந்​தது. இந்த ஆட்டத்தில் கேப் வெர்டே அணி​யின் கோல் கீப்​ப​ரான 40 வயதாகும் வோசின்ஹா தனது அபார செயல் திற​னால் உலக கால்​பந்து ரசிகர்​களை பெரிதும் கவர்ந்​தார். கோல் கம்​பத்​தின் முன் சுவர் போல் நின்று...
இலங்​கை​யில் நடை​பெற்று வரும் ‘ஏ’ அணி​கள் இடையிலான முத்​தரப்பு ஒரு​நாள் தொடரில் நேற்று முன்​தினம் இந்தியா ஏ - இலங்கை ஏ அணி​கள் மோதின. இதில் சூப்​பர் ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றி பெற்​றது. போட்டி முடிவடைந்​ததும் இலங்கை வீரர்​களான விஷேன் ஹலம்பகே, வனுஜ சஹான் ஆகியோர் இந்​திய அணி வீரர்​களான வைபவ் சூர்யவன்ஷி, சூர்​யான்ஷ் ஷெட்கே ஆகியோரை நோக்கி ஏதோ கூறினர். இதனால் கோபம் அடைந்த சூர்​ய​வன்​ஷி,...
கிலியன் எம்​பாப்​பே தனது அபாரமான இரட்டை கோல்களால் உலகக் கோப்பை வரலாற்றில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார். பிரான்ஸ் தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். அதுவும் கூடுதல் நேரத்தில் எம்​பாப்​பே அடித்த கோல் உண்மையில் பிரமிப்பூட்டும் கோல் என்பதோடு இந்த உலகக் கோப்பையில் இதுவரையிலான கோல்களில் ஆகச்சிறந்தது என்ற வகையறாவைச் சேர்ந்ததானது. தனக்கு வந்த அருமையான கிராஸை 30 யார்டு...
கன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பைப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி மேஜிக் ஹாட்ரிக் சாதனையினால் அல்ஜீரியா அணியை அர்ஜெண்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் 17, 60 மற்றும் 76வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல்களை அடித்து சாதனை புரிந்தார். கான்சாஸ் சிட்டியில் உள்ள கேஹா ஃபீல்ட் அட் அரோஹெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மெஸ்ஸி அடித்த மூன்று...
பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் மெக்​சிகோ​வின் மொன்​டெர்​ரி​யில் உள்ள எஸ்​டாடியோ மைதானத்​தில் நேற்று ‘எஃப்’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் சுவீடன் - துனீசியா அணி​கள் மோதின. 7-வது நிமிடத்​தில் சுவீடன் முதல் கோலை அடித்​தது. லிண்​டெலோஃப் நடு​ப்பகு​தி​யில் இருந்து தூக்கி அடித்த பந்தை துனீசிய கோல்​கீப்​பர் சமாக் தனது இடத்தை விட்டு தாண்டி வெகுதூரம் முன்​னேறி வந்து தடுக்க முயன்​றார். ஆனால் பந்தை அவர், சரிவர தடுக்​க​வில்​லை....
10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 23 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜூலை 3-ல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபிஷேக் தன்வர், ஸ்வப்னில் சிங், ஜெகதீசன்,...
அமெரிக்காவின் ஜியார்ஜியா, அட்லாண்டா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை ஹெச் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் கொண்ட ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணியை 50 லட்சம் மக்கள் தொகையே கொண்ட உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்ற 3-வது சிறிய ஆப்பிரிக்க நாடான கேப் வெர்டே கால்பந்து அணி 0-0 என்று டிராவுக்குப் பணித்தது. இதன் மூலம் அறிமுக உலகக் கோப்பை போட்டியிலேயே புள்ளிகள் பெற்று சாதனை...