செப்டம்பரில் ஆப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் இந்தியா மோதல்

0
20

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

இதன்படி செப்டம்பர் 13 முதல் 17 வரை டி 20 தொடர் நடைபெறும். 17-ம் தேதி முதல் போட்டியும், 15-ம் தேதி 2-வது போட்டியும், கடைசி மற்றும் 3-வது போட்டி 17-ம் தேதியும் நடைபெறும். இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த காலக் கட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தது.

ஏனெனில் கடந்த ஆண்டு இந்திய அணி, வங்கதேச சுற்றுப்பயணத்தை காலவரையின்றி தள்ளிவைத்து இருந்தது. வங்கதேசத்தில் நிலவிய அரசியல் பிரச்சினை காரணமாக இந்திய கிரிக்கெட் அணி அங்கு செல்வதை தவிர்த்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here