புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 87 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், பாபா இந்திரஜித் 115...
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆடவருக்கான ‘பி’ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மகளிருக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் விளையாட்டரங்கில் இன்று (ஆக.28-ம் தேதி) தொடங்குகிறது.
மகளிருக்கான போட்டி 30-ம் தேதி வரையும், ஆடவருக்கான போட்டிகள் 31-ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. ஆடவர் பிரிவில் 31 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் கலந்து...
இங்கிலாந்து - இலங்கை இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் போட்டி நாளை (ஆக.29-ம் தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக விலகிய வேகப்பந்து...
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் 22 விளையாட்டுகளில் 549 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. 169 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல போராட உள்ளனர்.
இந்த விளையாட்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள்...
9-வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அணி விவரம்: பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து,...
ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை தன்வி பத்ரி சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் செங்டு நகரில் நேற்று நடைபெற்ற ஆசிய 15 வயதுக்குட்பட்டோர் மகளிர் ஒற்றையர் பிரிவில் தன்வி பத்ரி, வியட்நாம் வீராங்கனை தி து ஹுயன் குயனுடன் மோதினார்.
இதில் தன்வி பத்ரி 22-20, 21-11 என்ற செட் கணக்கில் தி து ஹுயன் குயனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல்...
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் மார்க் வுட் விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்து வீரர் மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணிக்கு...
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் கில் இன்று தொடங்கவுள்ளது. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனும், செர்பிய வீரருமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷ்ய வீரர்கள் டேனியல் மேத்வதேவ், ஆந்த்ரே ரூபலேவ் உள்ளிட்ட...
தரவ்பாவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் 174/7 என்ற இலக்கிற்கு எதிராக மே.இ.தீவுகள் 17.5 ஓவர்களில் 176/3 என்று காட்டடியில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது.
மற்ற எந்த வடிவத்திலும் திக்கித் திணறும் மே.இ.தீவுகள் டி20 வடிவத்தில் உண்மையில் ஒரு சக்தியாக எழுச்சி பெற்று வருகின்றனர் என்பதற்கு இந்தப் போட்டி இன்னொரு உதாரணமாகத் திகழ்ந்தது....
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 171,சவுத் சகீல் 141 ரன்கள் விளாசினர்.இதையடுத்து பேட் செய்த...









