9-வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அணி விவரம்: பாத்திமா சனா (கேப்டன்), அலியா ரியாஸ், டயானா பெய்க், குல் பெரோசா, இராம் ஜாவேத், முனீபா அலி, நஷ்ரா சுந்து, நிடா தர், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால், சித்ரா அமின், சையதா அரூப் ஷா, தஸ்மியா ரூபாப், துபா ஹாசன். மாற்று வீராங்கனைகள்: நஜிஹா அலி, ரமீன் ஷமிம், உம்மி ஹனி.