‘பி’ டிவிஷன் வாலிபால் இன்று தொடக்கம்

0
40

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஆடவருக்கான ‘பி’ டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மகளிருக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் விளையாட்டரங்கில் இன்று (ஆக.28-ம் தேதி) தொடங்குகிறது.

மகளிருக்கான போட்டி 30-ம் தேதி வரையும், ஆடவருக்கான போட்டிகள் 31-ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. ஆடவர் பிரிவில் 31 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொள்கின்றன. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here