இங்கிலாந்து – இலங்கை இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் போட்டி நாளை (ஆக.29-ம் தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஆலி ஸ்டோன் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.அணி விவரம்: ஆலி போப் (கேப்டன்), பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், ஆலி ஸ்டோன், ஷோயிப் பஷிர்.