ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கால் இறுதி சுற்றில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 10.30 மணிக்கு நகோயா மாகாணத்தில் நடைபெறுகிறது.
கடந்த வாரம் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பை தொடரை 8-வது முறையாக வென்ற நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் களமிறங்குகிறது. ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடம்...
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்தியா - கொரியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் சியோல் நகரில் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ், கொரியாவின் சூன்வூ குவானை எதிர்த்து விளையாடுகிறார். தட்சினேஷ்வர் சுரேஷ் டென்னிஸ் தரவரிசையில் 367-வது இடத்தில் உள்ளார். அதேவேளையில் சூன்வூ குவான் 150-வது இடம் வகிக்கிறார்.
2-வது ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின்...
செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சாமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய அணி நேற்று இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
நிஹால் சரின் மட்டும் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். மகளிர் பிரிவில் இந்திய அணி 3.5-0.5...
ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் இடங்களில் சிக்கல்: 2 பேர் தங்க வேண்டிய சொகுசு கப்பல் அறையில் 3 பேருக்கு அனுமதி
admin - 0
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த 17 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில் வீரர், வீராங்கனைகள் தங்குமிடங்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டு, தெற்காசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் நாடுகள் வீரர்கள் தங்குவதற்காக பிரம்மாண்டமாக...
அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 30-ம் தேதி பொலிவியா அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி புர்கினா ஃபாசோ அணிக்கு எதிராகவும், அக்டோபர் 6-ம் தேதி பெனின் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது அர்ஜெண்டினா கால்பந்து அணி.
இந்த போட்டிகளுக்கான 28 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 39 வயதான லயோனல் மெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், அக்டோபர் 6-ம் தேதி...
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த 3 ஆண்டுகளாக துபாய், ஜெட்டா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் அருண் துமால் கூறும்போது, “ஐபிஎல் வீரர்கள் ஏலத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடத்த நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனால் அதிக திருமண சீசன் காரணமாக எங்களுக்கு ஏலம் நடத்துவதற்கான அரங்கம் கிடைக்கவில்லை.
அடுத்த சீசனுக்கான ஏலம் சிறியதாகவே இருக்கும் என்பதால் இந்தியாவிலேயே நடைபெற வேண்டும் என விரும்புகிறோம். அதற்கு தகுந்தவாறு...
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் தலா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டி 20 தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது போட்டி இன்று...
மேற்கு இந்தியத் தீவுகள் அணி இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
ஒருநாள் போட்டி தொடர் செப்டம்பர் 27-ல் தொடங்குகிறது. டி20 தொடர் அக்டோபர் 6 முதல் 17 வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஒருநாள் போட்டிக்கான அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நமன் திர், வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளனர்....
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்றுமுன்தினம் இரவு சவுத்தாம்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஹாரி புரூக் 49 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் விளாசினார். சர்வதேச டி 20...
‘ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026’ ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. அதிகாரப்பூர்வ தொடக்க விழாவுக்கு முன்னதாக சில போட்டிகள் தொடங்குகின்றன. இதன்படி கால்பந்து போட்டி கடந்த 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டி வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.
ஆசிய விளையாட்டு போட்டியில் மொத்தம் 45 நாடுகள் 43 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றன. 2023-ல் ஹாங்சோ ஆசிய...









