அர்ஜெண்டினா அணியில் மீண்டும் மெஸ்ஸி

0
20

அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 30-ம் தேதி பொலிவியா அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாடுகிறது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி புர்கினா ஃபாசோ அணிக்கு எதிராகவும், அக்டோபர் 6-ம் தேதி பெனின் அணிக்கு எதிராகவும் விளையாட உள்ளது அர்ஜெண்டினா கால்பந்து அணி.

இந்த போட்டிகளுக்கான 28 பேர் கொண்ட அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 39 வயதான லயோனல் மெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், அக்டோபர் 6-ம் தேதி பெனின் அணிக்கு எதிராக பியூனஸ் அயர்ஸில் நடைபெறும் நட்பு ரீதியிலான போட்டியில் கலந்து கொள்வார் எனவும் இந்த போட்டி அவருக்கு பிரியாவிடை வழங்கும் வகையில் அமையும் எனவும் அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் அணியிடம் வீழ்ந்த பிறகு லயோனல் மெஸ்ஸி, ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here