“நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம்?” – IND vs BRA கால்பந்து ஆட்டத்தை விமர்சித்த பாய்சங் பூட்டியா
admin - 0
‘ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் கால்பந்து அணி உடன் இந்திய கால்பந்து அணி விளையாடுவதன் மூலம் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம்?’ என்று இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சங் பூட்டியா விமர்சித்துள்ளார்.
பிரேசில் கால்பந்து அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது இந்திய கால்பந்து அணி உடன் நட்பு ரீதியான ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் பிரேசில் அணியின் ‘ஏ’...
ஐபிஎல் தொடரில் ஆடும்போது பும்ரா காயமடைகிறாரா, அதே காயத்துடன் விளையாடப் பணிக்கப்படுவதால் சர்வதேசத் தொடர்களின் போது காயமடைகிறாரா? அவரால், ஏன் தொடர்ந்து ஐபிஎல் ஆட முடிகிறது.. ஆனால், சர்வதேச தொடர்களை அரையும் குறையுமாக ஆடுகிறார் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக பும்ரா விலகியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வரும் 15 மற்றும் 23 ஆகிய தேதிகளில்...
‘அஜ்ஜு’ என்று இந்திய அணியில் செல்லமாக சக வீரர்களால் அழைக்கப்படும் அஜிங்கிய ரஹானே தனது அற்புதமான கிரிக்கெட் கரியரை முடித்துக் கொண்டு ஓய்வு அறிவித்து விட்டார்.
உண்மையிலேயே கிரேட் என்று சொல்வதற்கு அருகில் சென்று வந்தவர் ரஹானே. கோலி, பும்ரா, ஷமி, அஸ்வின் இல்லாத ஒரு அணியை அதுவும் ஆஸ்திரேலியாவில் 36 ஆல் அவுட்டுக்கு பிறகு வழிநடத்தி தொடரை வெல்வது என்றால் அது வெறும் அசாதாரணமானது மட்டுமல்ல, நினைத்துப் பார்க்கவே...
குத்துச்சண்டையில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தின் நிக்கோல் கிளைடை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரியா கங்காஸ் 4-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் நியாம் மிட்செல்லை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.
51 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாக் ஷி...
பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) படைத்துள்ளது.
சர்வதேச முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோகி வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான பிராண்ட் மதிப்பு அறிக்கையில், “ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த வணிக நிறுவன மதிப்பு 20.6 பில்லியன் டாலராக (சுமார் ரூ.1.97 லட்சம் கோடி) உயர்ந்து அசுர...
23-வது காமன்வெல்த் விளையாட்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரரான முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டின் நீளம் தாண்டுதலில் தொடர்ச்சியாக இரு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ஸ்ரீசங்கர் பெற்றார். அவர், கடந்த 2022-ம் ஆண்டு...
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாடும் இந்திய அணியின் சீருடை, நீல நிலத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் சீருடை பாரம்பரியமிக்க நீல நிறத்துக்கு பதிலாக...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார்.
38 வயதான அஜிங்க்ய ரஹானே இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டி, 90 ஒருநாள் போட்டி, 20 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அவர், 2013-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். கடந்த 2023-ல் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர், இந்திய...
நடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் திலீப் காவித், பாரா 100 மீட்டர் (டி47 பிரிவு) ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் இந்தியாவின் முகமது பாசில் வெள்ளி வென்றார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியா இதுவரை 15 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியில் தற்போது 8-வது இடத்தில் உள்ளது இந்தியா.
இந்திய நேரப்படி இன்று...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிரினிடாட்டில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் 311 ரன்களும், பாகிஸ்தான் 282 ரன்களும் எடுத்தன. 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷமர் ஜோசப் 38, டேக்நரைன்...









