ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு பார்படாஸில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூயார்க் ஆடுகளத்தில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. கனடா அணிக்கு எதிராக லாடர்கில் மைதானத்தில் விளையாட இருந்த கடைசி...
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில்இன்று காலை 6 மணிக்கு செயின்ட் லூசியாவில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகளுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ரோவ்மன் பொவல் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரின் கடைசிலீக் ஆட்டத்தில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள மேற்கு இந்தியத் தீவுகள் -ஆப்கானிஸ்தான் மோதின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. டி 20 உலகக் கோப்பைவரலாற்றில் மேற்கு இந்தியத் தீவுகளின் அதிகபட்ச ரன்குவிப்பாக இது அமைந்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 53பந்துகளில், 8 சிக்ஸர்கள்,...
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்திவிராஜ் தொண்டைமான் தேர்வு
admin - 0
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் ஷாட்கன் பிரிவில் பங்கேற்கும் 5 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 36 வயதான பிருத்திவிராஜ் தொண்டைமான் இடம் பெற்றுள்ளார். இவர், ஆடவருக்கான டிராப் பிரிவில் பங்கேற்க உள்ளார்.
பிருத்திவிராஜ் தொண்டைமானுடன் இந்திய அணியில் ராஜேஷ்வரி...
யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘டி’ பிரிவில் டசால்டார்ஃப் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் அட்ரியன் ராபியோட் உதவியுடன் பந்தை பெற்ற பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கிலியன் பாப்பே பந்தை விரைவாக கடத்திச் சென்று இலக்கை நோக்கி வலுவாக உதைத்தார். ஆனால் ஆஸ்திரியா கோல் கீப்பர் பேட்ரிக் பென்ட்ஸ்...
‘21 டாட் பந்துகள், 4 விக்கெட்கள்’ – தன்சிம் ஹசனின் அபார பந்து வீச்சால் சூப்பர் 8-ல் கால்பதித்தது வங்கதேசம் | T20 WC
admin - 0
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேபாளம் அணிக்கு எதிரான 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணியின் வெற்றியில் தன்சிம் ஹசன் சாகிப், முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோரது பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது.
மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 19.3...
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவுடன் மோதுகிறது.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்கில் நகரில் ‘ஏ’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - கனடா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இதுகடைசி லீக் ஆட்டம்.
இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி...
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி.
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நமீபியா 17 ஓவர்களில் 72 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும்...
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று காலை 6 மணிக்கு மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள ஆன்டிகுவாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - நமீபியா அணிகள் மோதுகின்றன. மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வென்றிருந்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 36 ரன்கள்...
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்புரீத் பும்ரா ஒரு மேதை எனவும் அவர் தனது உயர்மட்ட செயல்திறனை டி20 உலகக் கோப்பை முழுவதும் தொடரச் செய்ய வேண்டும் எனவும் விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் நியூயார்க்கில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. பேட்டிங்குக்கு கடும் சவாலாக திகழ்ந்து வரும்...










