Google search engine
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில உள்ள விவேகானந்தா யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் - சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன. மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட் அணி தனது கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை தோற்கடித்த நிலையில் சென்னையின் எஃப்சி அணியை எதிர்கொள்கிறது. 5 வெற்றி, 2 டிரா,...
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அறிமுக வீரராக ஆல்ரவுண்டரான பியூ வெப்ஸ்டர், மிட்செல் மார்ஷுக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 0-1 என பின்தங்கியுள்ளது. 2-வது...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்திருந்தது. 3-வது சுற்றில் குகேஷ் 37-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம்...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பனீஸை சந்தித்து பேசினர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என...
 சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சகநாட்டைச் சேர்ந்த, ஐரா சர்மாவுடன் மோதினார். 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தி சிந்து 21-10, 12-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்ரேல் வீரர் டேனியல் டுபோவென்கோவுடன் மோதினார்....
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான சாதனையை படைத்தது இலங்கை அணி. டர்னில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டி மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்திருந்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 20.4...
சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் நேற்று இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திரிபுரா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரீதம் பால் 57, ஸ்ரீனிவாஸ் 29 ரன்கள் சேர்த்தனர். குஜராத் அணி சார்பில் அர்சான் நாக்வஸ்வாலா 3, சிந்தன் கஜா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த...
சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், மலேசியாவின் ஷோலே ஐதிலை எதிர்த்து விளையாடினார். இதில் லக்சயா சென் 21-12, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி, மெய்ராபா லூவாங்க் மைஸ்னம் ஆகியோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். மகளிர் ஒற்றையர் பிரிவு...
சென்னை நேரு விளையாட்டரங்கில் 56-வது ஏஎல் முதலியார் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த டி.லதா பந்தய தூரத்தை 37:34.3 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். வட்டு எறிதலில் எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த ஷாலு ரேகானா 41.41 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் எத்திராஜ் கல்லூரியைச் சேர்ந்த...
புரோ கபடி லீக் 11-வது சீசனின் 2-வது கட்ட போட்டிகள் தற்போது நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி அட்டவணையை போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதன்படி இறுதிப்போட்டி வரும் டிசம்பர் 29-ம் தேதி புனேவில் உள்ள பாலேவாடி விளையாட்டு வளாகத்தில் நடைபெறுகிறது. முன்னதாக டிசம்பர் 26-ம் தேதி பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ம் தேதி...