கடற்கரைகள், தி.நகரில் வாகன நிறுத்த கட்டண வசூலில் முன்னாள் ராணுவத்தினர் – சென்னை மாநகராட்சி திட்டம்
admin - 0
மெரினா கடற்கரையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணியில் முன்னாள் ராணுவத்தினரை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்களை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை, தியாகராயநகர் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைத்துள்ளது.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு
admin - 0
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய பள்ளிகளுக்கு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் ச.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் வேண்டி சில...
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது: 6,244 காலி இடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி
admin - 0
தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார்20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள...
தமிழகத்தில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதத்துக்காக சட்டப்பேரவை வரும் ஜூன் 24-ம் தேதிமீண்டும் கூடுவதாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டுமுதல் கூட்டம் கடந்த பிப். 12-ம் தேதிஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.15-ம்தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. நிறைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதில் அளித்தார். இதையடுத்து, இந்த 2024-25 நிதி ஆண்டுக்கான பொதுபட்ஜெட்டை...
நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: சமீபத்திய நீட் தேர்வில், வினாத்தாள் கசிவு, குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணைமதிப்பெண்கள் என்ற போர்வையில்நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளிவழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய மத்திய அரசின்அதிகாரக்...
மாதவரம் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் பாக்கெட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நேற்று காலை பால் பண்ணையில் இருந்து மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதமானதாகவும் பால் முகவர்கள் தெரிவித்தனர். இதையொட்டி பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவின்...
அமெரிக்காவில் உள்ளதைப் போல இந்தியாவிலும் ஹைட்ரஜனுக்கு உற்பத்தி வரிக்கடன் போன்ற சலுகைகளை வழங்கி பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை கணிசமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று அவன்டஸ் எனர்ஜி நிறுவனத்தைச் சேர்ந்த கவுதம் ரமேஷ் கூறினார்.
எஃகு, அலுமினியம் மற்றும் சிமென்ட் போன்ற தொழில்களுக்கு அதிக வெப்பநிலை செயல்முறைகள் தேவைப்படுகின்றன. அவை மின்சாரத்தால் மட்டுமே திறமையாக இயங்காது. எனவே பசுமை ஹைட்ரஜன் ஒரு சுத்தமான, உயர் ஆற்றல் எரிபொருள் மாற்றாக...
தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு வரும் 11-ம் தேதி சென்னையில் கூடுகிறது. அதில் பாஜக தமிழகத்தில் வளர்ச்சி பெறுவதை தடுப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வென்றுள்ளது. விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் காங்கிரஸின் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு வரும் 11-ம் தேதி சென்னை...
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை தண்ணீர் திறக்க வாய்ப்புக் குறைவு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
admin - 0
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புக் குறைவு என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நூலாக்கம் செய்துள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கையேட்டை வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட குறு, சிறு மற்றும் நடுத்தரத்...
விஜய பிரபாகரனை தோற்கடிக்க சூழ்ச்சி நடந்ததாக பிரேமலதா குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு
admin - 0
விருதுநகர் தொகுதியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்என்று தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு கொடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று கூறியதாவது:
விருதுநகரில் மொத்தம் 10.61 லட்சம்ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதில் விஜயபிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக கூறுகின்றனர். தபால் வாக்குகள் எண்ணப்பட்டதற்கு பிறகுதான் விஜய பிரபாகரன் 0.4 சதவீத...










