Google search engine
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 77-ன்படி, தேர்தல் பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சி தலைவர்களின் விமான பயணம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் வேட்பாளர், முகவர்களின் கணக்கில் சேராது. தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெற விரும்பும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் பிரச்சாரம் செய்பவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில்,...
மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால நிவாரணம் கோரி சவுக்கு சங்கர் மனு அளித்தால், தமிழக அரசு அதை 8 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள், பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ‘சவுக்கு’ யூ-டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை போலீஸார் கடந்த மே 4-ம் தேதி கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரை...
‘குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலமே, தமிழகத்துக்கு பொற்காலம்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ம் தேதி (இன்று) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி ‘குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கல்வி, ஆடல், பாடல், விளையாட்டு என்று மகிழ்வுடன் வாழ...
தமிழகத்தில் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாகவும், இவ்வகை பேருந்துகளைபயணிகள் தவிர்க்கவும் போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய...
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள பாமக, கூட்டணியில் உள்ள பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் திமுகவை சேர்ந்த புகழேந்தி. மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அவர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்தார். ஏப்ரல் 8-ம் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று...
மின்கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல் வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின்கீழ் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 3 கோடிக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் கட்டணத்தை மின்வாரியம் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில்,...
மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை நுகர்வோர்முன்பு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று கட்டி வந்தனர். செயலிகள் வழியாக.. பின்னர், வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியது. இதன்படி, நுகர்வோர்ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தலாம். மேலும்,...
சட்டப்பேரவையில் துறைகள் தோறும் மானிய கோரிக்கை விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நாளை பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.15-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதானவிவாதம் நடைபெற்றது. இறுதிநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதிலளித்தார். இதையடுத்து,...
 தமிழகத்தில் 2,500 கிராம சுகாதார பணியாளர்களை நியமனம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், அஞ்சலக வங்கிக் கணக்கு எண் ஆகிய சேவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி துணைஆணையர் (கல்வி) ஷரண்யாஅறி, மண்டலக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், மோகன்குமார்,...
கோவையில் ஜூன் 14-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா, ஜூன் 15-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூன் 8-ல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு, 40 மக்களவை...