அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
admin - 0
வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை சிறப்பு நீதிமன்றம் செப்.13-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்த தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி பர்வீன், ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு திருவான்மியூரில் கடந்த 2008-ம்ஆண்டு வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்து...
அரசியலமைப்பு சட்டத்தை இந்திரா காந்தி சிதைத்தது பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்: அண்ணாமலை வலியுறுத்தல்
admin - 0
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தளவுக்கு சிதைக்கப்பட்டது என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் தொடங்கிய தமிழ்மொழி அகாடமி சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே எழுதிய, இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஆங்கிலப் புத்தகம், சட்டமேதை அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு பற்றிய தமிழ்ப் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில்...
தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்ப பெற மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
admin - 0
தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, சென்னையில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதர பணிகளில் தனியார்மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சம்மேளனம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே.ரங்கராஜ் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் 500-க்கும்...
நடிகர் விஜய் கட்சி கொடியில் இருந்து யானை சின்னத்தை அகற்ற கோரி புகார்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு
admin - 0
நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை அகற்ற கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி மனு அளித்துள்ளது.
நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை சமீபத்தில் வெளியிட்டார். மஞ்சள்,கருஞ்சிவப்பு நிறங்கள் அடங்கியஅந்த கொடியில், இரண்டு யானைகள் மற்றும் நடுவில் வாகை பூ இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், தங்கள் கட்சியின் சின்னமான யானையை விஜய் பயன்படுத்தியதற்கு, பகுஜன் சமாஜ் கட்சியினர்...
பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் மத்திய அரசு நிதி மீண்டும் நிறுத்தம்: மானியத்தை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
admin - 0
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாததால் பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியுதவியை மத்திய அரசு மீண்டும் நிறுத்தியுள்ளது. இதனால் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மானியத்தை விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. ஒருங்கிணைந்த...
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்
admin - 0
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து சென்னையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததை கண்டித்தும், `பெண்களை காப்பது நமது கடமை' எனும் தலைப்பில் நீதி கேட்டும் டாக்டர் ராஜரத்தினம் மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் லைஃப்லைன் மருத்துவமனை,...
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை: பொது சுகாதார துறை இயக்குநர் தகவல்
admin - 0
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
குரங்கு அம்மை முதன்முதலில் 1958-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குரங்கிடம் இருந்து பரவியதாகக் கூறப்படுகிறது. தற்போது ஆப்பிரிக்கா மட்டுமின்றி 116 நாடுகளிலும் குரங்கு அம்மை பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்றவை அந்த தொற்றுக்கான...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 8.19 சதவீத வாக்குகளை பெற்றது. இதன்மூலம் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறியுள்ளது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக விலகிய நிலையில், திமுக, பாஜக கூட்டணிக்கு பிறகு 3-வது பெரிய கட்சியாக போட்டியிட்டது. தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி, அதற்கான களப்பணிகளை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கட்சி உள்கட்டமைப்பை சீரமைத்து,...
தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ புழுங்கல் அரிசி ரூ.50 முதல் ரூ.76 வரை விற்கப்படுகிறது. பச்சரிசி ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கிறது. மோட்டா ரகம், சன்ன ரகம் என 2 ரகம் இருந்தாலும், சன்ன ரக அரிசியையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அரிசியின் தரத்தையும், அதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் பொருத்து விலை மாறுபடுகிறது. சில குறிப்பிட்ட பிராண்ட்கள் விலை ரூ.70-க்கு மேல்தான்...
மின்வாரிய பணியாளர் கூட்டமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: நிர்வாகிகள் தேர்தலையும் நடத்துவார்
admin - 0
தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக ஷாஜகான், பொதுச்செயலாளராக சம்பத், பொருளாளராக ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த மே 26-ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து இந்த தேர்தல் தொடர்பாக இருதரப்பினரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இந்தகூட்டமைப்பின் துணை விதிகளை ஆய்வு செய்தபோது, அதில் ஏராளமான குளறுபடிகள்...










