Google search engine
சென்னை அப்போலோ மருத்​துவ​மனை​யில் நெஞ்​செரிச்சல் பிரச்​சினைக்கு சிகிச்சை பெற்று​வந்த இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ் உடல்​நிலை​யில் முன்னேற்றம் ஏற்பட்​ட​தால் வீடு திரும்பினார். சில தினங்​களுக்கு முன்பு சென்னை வந்த, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ். ரிசர்வ் வங்கி குடி​யிருப்​பில் தங்கியிருந்​தார். நேற்று முன்​தினம் இரவு அவருக்கு திடீர் உடல்​நலக் குறைவு ஏற்பட்​ட​தால், சென்னை ஆயிரம் விளக்​கில் உள்ள அப்போலோ மருத்​துவ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார். மருத்​துவர்கள் குழு​வினர்...
நீதித்​துறை மீது மக்கள் வைத்​துள்ள நம்பிக்கையை காப்​பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்கு​விக்​காதீர்கள் என இளம் வழக்​கறிஞர்​களுக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் அறிவுரை வழங்​கினார். தமிழ்​நாடு மற்றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் சார்​பில் அரசி​யலமைப்பு சட்டதின விழா மற்றும் 1,200 புதிய வழக்​கறிஞர்கள் பார் கவுன்​சிலில் பதிவு செய்​யும் நிகழ்வு, சென்னை உயர் நீதி​மன்ற கலையரங்​கில் நேற்று மாலை நடைபெற்​றது. இந்நிகழ்​வில் பார் கவுன்​சில் தலைவர் பி.எஸ்​.அமல்​ராஜ் வரவேற்​றார்....
சென்னையில் பெய்த மழை காரணமாக சாலையோரம் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக அன்றைய தினம் முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. அதன்படி, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், நந்தனம், கிண்டி, மாமல்லபுரம், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மேற்கு தாம்பரம், எம்ஜிஆர் நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில்...
வடகிழக்குப் பருவமழையை யொட்டி விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தமிழகம் முழுவதும் பெய்துவருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணத்தால் சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதையடுத்து சென்னை அருகம்பாக்கம் மெட்ரோ அருகில் மற்றும் கோடம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதிகளில் உள்ள விருகம்பாக்கம்...
வங்கக் கடலில் நிலை கொண்​டுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து 400...
‘மழையை எதிர்​கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்’ என்று முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சென்னை சோழிங்​கநல்​லூரில், மாற்றுத் திறனாளி​களுக்கான ‘விழுதுகள்’ சேவை மையம் திறப்பு விழா​வில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் பங்கேற்​றார். அப்போது செய்தி​யாளர்​களின் கேள்வி​களுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: டெல்டா பகுதி​களில் மழை அதிக​மாகப் பெய்​யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்​துள்ளதே? அதற்கான பணிகள் எல்லாம் முறைப்படி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு அறிவுறுத்​தல்கள் வழங்​கப்​பட்​டுள்ளன. அதிகாரி​களுக்​கும் உத்தர​விட்​டுள்​ளோம். அதுதவிர மண்டல​வாரியாக...
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9-ம் தேதி கூடுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளித்தார். தொடர்ந்து, 19-ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசுவும்,...
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன முதல் அதிகனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது....
தமிழகத்தில் முதன்முதலாக, மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகளை வழங்கும் ‘விழுதுகள்’ சேவை மையத்தை சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 273 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், சென்னையில் சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற விழையும் பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில்...
சென்னை புரசைவாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையாக கொட்டப்பட்டிருந்தன. அவை தவறாக அச்சானதால் கழிவாக கிடந்தவை என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள புரசைவாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில், அரசு கேபிள் நிறுவனத்தின் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இம்மைய பணியாளர்கள் நேற்று, வாக்காளர் அட்டைகளை குப்பையில் கொட்டியுள்ளனர். அரசு அடையாள ஆவணங்களை இப்படி குப்பையில் கொட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு...