மருத்​துவ​மனை​யில் இருந்து ரிசர்வ் வங்கி கவர்னர் வீடு திரும்பினார்

0
26

சென்னை அப்போலோ மருத்​துவ​மனை​யில் நெஞ்​செரிச்சல் பிரச்​சினைக்கு சிகிச்சை பெற்று​வந்த இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ் உடல்​நிலை​யில் முன்னேற்றம் ஏற்பட்​ட​தால் வீடு திரும்பினார். சில தினங்​களுக்கு முன்பு சென்னை வந்த, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ். ரிசர்வ் வங்கி குடி​யிருப்​பில் தங்கியிருந்​தார். நேற்று முன்​தினம் இரவு அவருக்கு திடீர் உடல்​நலக் குறைவு ஏற்பட்​ட​தால், சென்னை ஆயிரம் விளக்​கில் உள்ள அப்போலோ மருத்​துவ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார்.

மருத்​துவர்கள் குழு​வினர் பரிசோதனைகளை மேற்​கொண்டு, அவருக்கு தேவையான சிகிச்​சைகளை அளித்​தனர். இதுதொடர்பாக நேற்று காலை 10 மணிக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவ சேவைகள் இயக்​குநர் மருத்​துவர் ஆர்.கே.வெங்​கடாசலம் வெளியிட்ட செய்திக்​குறிப்​பில், “ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி​காந்த தாஸ் நெஞ்​செரிச்சல் (அசிடிட்டி) காரணத்​தால் மருத்துவ​மனை​யில் அனும​தி​யாகி​யுள்ளார்.

மருத்​துவ குழு​வினர் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்​றனர். அவர் நலமுடன் உள்ளார். விரை​வில் வீடு திரும்​புவார்” என்று தெரி​வித்திருந்​தார். இதற்​கிடை​யில், உடல்​நிலை​யில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மதியம் சக்தி​காந்த தாஸ் வீடு திரும்​பினார்.

அமைச்சர் கே.என்​.நேரு: திமுக முதன்மை செயலாளர் மற்றும் தமிழக அரசின் நகராட்சி நிர்​வாகத்​துறை அமைச்சர் கே.என்.நேரு​வுக்கு சில தினங்​களாக லேசான காய்ச்சல் இருந்​தது. இந்நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு காய்ச்சல் அதிக​மானதுடன், உடல் சோர்​வும் ஏற்பட்​ட​தால், அப்போலோ மருத்​துவ​மனை​யில் அனும​திக்​கப்​பட்​டார்.மருத்​துவர்கள் பரிசோதனைகளை மேற்​கொண்டு, அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்​தனர். உடல்​நிலை​யில் முன்னேற்​றம் ஏற்பட்​டதை தொடர்ந்து, நேற்று ம​தி​யம் மருத்துவ​மனை​யில் இருந்​து அமைச்​சர்​ கே.என்​.நேரு வீடு திரும்​பினார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here