Google search engine
மதுரை அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வீடுகள் இல்லாமல் மழையிலும், வெயிலிலும் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் தலா ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்கள் மலைகளில் தேன், கிழங்கு, மூலிகைப்பொருட்களை சேகரித்து விற்பனை...
முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக மயிலாப்பூர் நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவை மயிலாப்பூர் அலுவலகம் அழைத்து வந்து போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். சென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன நிர்வாக இயக்குநர் தேவநாதன் யாதவ் மற்றும் இயக்குநர்கள் குணசீலன்,...
தமிழ்நாடு ‘முதலமைச்சர் கோப்பை -2024’ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘முதலமைச்சர் கோப்பை - 2024’ விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறஉள்ளது. இதில் 12 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 முதல் 25 வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள், 15 முதல் 35 வயது வரையுள்ள பொதுப்...
தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு திமுக அரசே காரணம் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திரு.வி.க.நகர் தொகுதி அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓர் அரசு, ஏழை மாணவர், மாணவிகளின் விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் விளையாட்டுப்...
தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்களை இந்திய வம்சாவளியினர் தூண்ட வேண்டும் என்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்க்க, அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று முன்தினம் சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்காவாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோருக்கு பறை இசை மற்றும் திருக்குறள் பாடல்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் முதல்வர்...
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்புக் வழக்கு விசாரணைக்கு, தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் குன்னம்பட்டியில் 22 ஏக்கர் நிலத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டோர் மோசடி செய்ததாக, குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின்பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது....
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஐ.எஸ். இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது....
அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதியை கொடுக்காததால் பல லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கிய பிறகு அதனை வழங்க நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான...
 யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிடி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, சவுக்குசங்கர் நீதிபதிகளுக்கு எதிராகவும்கூட அவதூறு கருத்துக்களை பரப்பியவர்....
சர்வதேச அரசியல் கல்வி பயிலஅண்ணாமலை லண்டன் சென்றநிலையில், கட்சிப் பணிகளை கவனிக்க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட ‘தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் கல்வி பயிலுவதற்காக 28-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு 3 மாதம் தங்கியிருந்து, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக, பாஜக...