Google search engine
மூத்த பெரு​மக்கள் ஆதரவு மன்றம் சார்​பில் பொது​மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் சைபர் கிரிமினல்​களின் மிரட்​டல்​கள், அதனால் ஏற்படும் இடர்​பாடு​களில் இருந்து தப்பிப்​பது, விழிப்புடன் இருப்பது தொடர்பான விழிப்பு​ணர்வு நிகழ்ச்சி சென்னை​யில் நேற்று நடைபெற்​றது. மூத்த பெரு​மக்கள் ஆதரவு மன்றத்​தின் தலைவரும் முன்​னாள் நீதிப​தி​யுமான டி.என்​.வள்​ளி​நாயகம் வரவேற்​றார். இந்த நிகழ்​வில் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​ கொண்ட வருமான வரித்​துறை ஆணையர் வி.நந்​தகு​மார் பேசி​ய​தாவது: கிரெடிட், டெபிட் கார்டு, மெயில் ஐடி,...
டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, சென்னை, டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள், 50 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக...
இந்திய வராலாற்றைப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் வி.பி.சிங் என அவரது 16-வது ஆண்டு நினைவு தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் பிரதமர், வி.பி.சிங் கடந்த 2008-ம் ஆண்டு நவ.27ம் தேதி மறைந்தார். அவரது 16 வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய வரலாற்றைப் புரட்டிபோட்ட புரட்சியாளர்,சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின்...
துறைமுகங்களுக்கு கப்பல் வருவதற்கு வழி காட்டும் மிதவை சென்னை மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியது. இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை...
பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். சமூகநலத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை தொடர்பான பயிலரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது. சமூகநலத் துறை அமைச்சர் கீதா...
சென்னை துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட இழுவைகள், எண்ணெய் மீட்பு கப்பல் டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.27 லட்சம் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சென்னை துறைமுகத்தில் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டில் கழிவு செய்யப்பட்ட 4 இழுவைகள் மற்றும் ‘அன்னம்’ என்ற எண்ணெய் மீட்பு கப்பல் ஆகியவற்றுக்கு டெண்டர் கோரப்பட்டிருந்தது. இந்த டெண்டரைகுறிப்பிட்ட சிலருக்கு வழங்குவதற்காக, அப்போதைய...
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, தமிழக மீனவர்களை மீட்டுத் தரும்படி கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமாழி நேற்று சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், ‘‘கடலோர காவல்படையால் லட்சத்தீவுகள் அருகில் கைது செய்யபப்பட்ட தூத்துக்குடி தருவை குளத்தைச்...
இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை ஆதரித்துப் பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் சையது இப்ராஹிம் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் கலந்துகொண்டு, இந்திய...
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிக்காக, காந்தி இர்வின் சாலை அருகில் இருந்த பார்சல் அலுவலகம் முழுமையாக இடிக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று எழும்பூர் ரயில் நிலையம். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு...
தமிழகத்துக்கு புயல் ஆபத்து சற்றே நீங்கும் நிலையில், இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழையும் இன்று பெய்யக் கூடும் என்று சென்னை வானைலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது....