Google search engine
சீர்மிகு சிறப்பு சட்டக்கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்த அவர்களுக்கு ஆன்லைனில் சிறப்புசட்டக்கல்வி அளிக்கும் புதிய திட்டத்தை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், சுரானா அண்ட் சுரானா சர்வதேச சட்ட மையத்துடன் இணைந்து சீர்மிகுசிறப்பு சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு சட்டக்கல்வி தொடர்பான ஆன்லைன் சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்க உள்ளது. இந்த புதிய கல்வித் திட்டத்தின்...
சென்னை கிண்டி, அரிமா சங்க லேபர் காலனி பகுதியில் அரிமா சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை இணைந்து இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமை நேற்று நடத்தின. இதனை தொடங்கிவைத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழக அரசும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு...
தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இந்த விளக்கத்தை தந்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ்...
சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கும் மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைப்பதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் தற்போது வரை 8,180 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தனியார் நிறுவனங்களே அமைத்துள்ளன. மாநகராட்சி, நகராட்சி பகுதிகள் தவிர்த்து மாவட்டம் தோறும் தலா 50 முதல் 100 மெகாவாட் என மொத்தம் 4 ஆயிரம் மெகாவாட்...
காஞ்சிபுரம் / சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்த விவகாரத்தில் அமைச்சர்கள் - தொழிற்சங்கம் இடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இன்று விடை தெரியும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சிஐடியு சார்பில் சங்கம் அமைக்கப்பட்டது. இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பனஉட்பட...
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் விமான சாகசத்தை கண்டுகளித்துவிட்டு வீடு திரும்பியபோது 5 பேர் உயிரிழந்தனர். இதைக் கண்டு அவர்களது குடும்பத்தினர் கதறி துடித்தது காண்போரை கண்கலங்க வைத்தது. மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 15 லட்சம் பேர் ஒரே நேரத்தில் திரண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதுவும் வெயிலின்...
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி என்எல்சி நிர்வாகம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், ‘‘என்எல்சி நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க தொழிலாளர்நல தீர்ப்பாயம் மற்றும்...
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் முதன்மையான மற்றும் சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக, ஐநா அமைப்பின் 2024 ஆண்டுக்கான “United Nation Interagency Task Force...
 ‘பிரதமரின் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் நிறுத்த முயற்சியை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்கின்றன’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மெரினாவில் விமானப்படை வீரர்களின் வான்வெளி சாகசம் வரவேற்கத்தக்கது. அதைக்காண கூடியிருந்த மக்கள் கூட்ட நெரிசலில் இறந்ததாகத் தெரியவில்லை. மயக்கம், ஏற்கெனவே இருந்த நோய்களால் இறந்ததுபோல் தெரிகிறது. இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி அமோக...
ராமேசுவரம்: தேவிபட்டினம் அருகே பெருவயல் ரெணபலி முருகன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே பெருவயலில், ரெணபலி முருகன் கோயில் கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி (கி.பி.1728-1735) மன்னரின் (பிரதானி) வைரவன் சேர்வைக்காரரால் கட்டப்பட்டது. அவருக்கு பின் கி.பி.1736-ல் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கலையனூர் எனும் கிராமத்தை கோயிலுக்கு தானமாகக் கொடுத்த கல்வெட்டு இந்த...