Google search engine
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் கிருஷ்ணாபுரம், அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயிலில் ரூ.5.81 கோடி மதிப்பில் 4 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.68.36கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 2,226 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,755 கோடி மதிப்பிலான 7,005.70 ஏக்கர் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும்,...
ராமேசுவரம்: தமிழகத்தின் தென்கோடியில் உள்ளராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாக 1931-ம் ஆண்டு அக்.15-ம் நாள் பிறந்தார் அப்துல் கலாம். அவரின் முழு பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் உடன் பிறந்த சகோதரர்கள் 3 பேர். ஒரு சகோதரி. 1958-ம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள தொழில்நுட்ப மையத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக சேர்ந்தார். பின்னர் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பணியாற்றினார். அப்துல்...
சென்னை: இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு,பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, விசிக துணை பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, எஸ்.எஸ்.பாலாஜி,ஆளூர் ஷா நவாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலுக்கு மத்திய அரசு...
பெரம்பலூர்: தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளை ஒப்பந்தஅடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அக். 24-ம் தேதி ஆம்னி பேருந்துஉரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பண்டிகைக் காலங்களில் கூடுதல்கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் செயலி மூலமாக முன்பதிவு...
சென்னை: பல்லாவரத்தில் ஓட்டல் கண்காணிப்பாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என போலீஸ் அதிகாரிவிளக்கம் அளிக்க தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் (30). இவர் சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில், பிரபல தனியார் ஓட்டல் ஒன்றில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச்12-ம் தேதி ஓட்டலுக்கு வந்த அனகாபுத்தூரை சேர்ந்த சங்கர் (55) மற்றும் அவரது...
சென்னை: கனமழை காரணமாக கலைஞர் நூற்றாண்டு பூங்கா 4 நாட்களுக்கு மூடப்படுவதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைவெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழைபெய்யும் என வானிலை ஆய்வுமையத்தால் அறிவிக்கப்பட்டு, ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 15-ம் தேதி (இன்று) முதல் 18-ம் தேதி வரை 4...
சேலம்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,445 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்றுவிநாடிக்கு 17,596 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்துடெல்டா பாசனத்துக்கு வெளியேற் றப்படுவது விநாடிக்கு 3,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று...
அருப்புக்கோட்டை: கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். முன்னதாக ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் தரிசனம்செய்தார். பின்னர், நெசவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையில்லாத 1,500 சட்டங்களை நீக்கியுள்ளோம். கைத்தறி...
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தொடர் கவனம்செலுத்த வேண்டும் என தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் அந்தபகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு, சாலைகள் வெள்ளநீரால் மூழ்கிய நிலையிலும், ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து விழுந்துஉயிரிழப்புகளும் கூட ஏற்பட்டுள்ளன. இவ்வாறு...
சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும்போது வெறும் 8,932 என நிர்ணயித்துள்ளதை மாற்றி குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளில் தொகுதி 4-ன் கீழ் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது பல்வேறு...