Google search engine
மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் பெண்கள் சுய மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் இதுவரை 5.24 லட்சம் பேருக்கு...
சென்னை: நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தமிழகத்திலும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணிகளை மாநில, மாவட்ட நிர்வாகிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கிளைகளிலும் 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜகவினர் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும், பாஜவினர் எதிர்பார்த்ததுபோல உறுப்பினர் சேர்க்கை இல்லை என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. தற்போதுவரை 30 லட்சம் அளவிலேயேஉறுப்பினர்கள் இணைந்திருப்பதாகவும், அதனால், உறுப்பினர் சேர்க்கைக்கான கால...
சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று 379 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம்...
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளிலும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பல உறுப்பினர்களும் ஒருமித்து குரல் எழுப்பினர். குறிப்பாக, தாம்பரத்தில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு கொடுக்கும் பணியை, ஒப்பந்ததாரர் சரியாக செய்வதில்லை. அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. அதனால் அனகாபுத்தூர் போன்று தாம்பரத்திலும் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒப்பந்ததாரர் மூலம் திட்டத்தை முடிக்க...
சென்னை: தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இது தவிர, தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி இயக்க உள்ளோம். வெளிப்படையான ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுக்கு இயக்க கட்டணம் ரூ.51.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு பேருந்துகளில் என்ன கட்டணம் தருவார்களோ, அதே...
சென்னை: விசிகவில் இருந்து அருந்ததியின மக்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ்சதித்திட்டம் தீட்டுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் விசிக, அங்குள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் என்பதே,ஆர்எஸ்எஸ் அமைப்பு சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்துக்கே தெரியும். அவர் ஒரு ஆர்எஸ்எஸ்காரர். படித்த காலத்தில் இருந்தேஆர்எஸ்எஸ் தொண்டனாகத்தான் வளர்ந்தார். அரசியலில்...
பள்ளி மாணவர்களுக்கான தடகள, குழு விளையாட்டு போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன.இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: நடப்பு (2024-25) கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின தடகள போட்டிகள், பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள், குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள்...
சென்னை: தீபாவளி தினத்தில் காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அக்.31-ம் தேதி தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டை போலவே இந்த...
சென்னை: கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள 30 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை வழங்க மின்வாரியத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதி என 2 பிரிவுகளில் தமிழக மின்வாரியம் மின் இணைப்பு வழங்குகிறது. இதில், சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவு, மின் விநியோகம் ஆகிய அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசம். வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம்...
சென்னை: டிஜிபி அலுவலகத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்வுகள் நடைபெறுவதால், மெரினா பகுதியில் இன்று காலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் இன்று (அக்.21) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் தலைமை டிஜிபி சங்கர் ஜிவால், காவல் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை...