தற்கொலைகள் தொடர்ந்து நடப்பதால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
admin - 0
பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடருவதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். வேலைக்குகூட செல்லாமல் மற்றவர்களிடம் கடன்...
தேசிய சட்ட நாளையொட்டி முதல்வர் தலைமையில் அரசமைப்பு முகப்புரை வாசிப்பு: அரசு, கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி
admin - 0
தேசிய சட்ட நாளையொட்டி அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு தினம் (தேசிய சட்ட நாள்) நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-ம் ஆண்டு நாளையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், துறை செயலர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்....
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாக வாய்ப்பு: டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை
admin - 0
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...
சென்னை துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட இயந்திர இரும்பு பொருட்களுக்கான டெண்டர் அய்யப்பாக்கத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இதனால், துறைமுகத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், அப்போதைய, துறைமுக இணை இயக்குநராக இருந்த புகழேந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று துறைமுக முன்னாள் இணை இயக்குநர் வீடு உள்பட 3 இடங்களில்...
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை – 3 ல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் தலா 210 மெகாவாட் திறனில் 3 அலகுகளுடன் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் தலா, 600 மெகாவாட் திறனில் 2 அலகுகள் உடைய வடசென்னை விரிவாக்க அனல்...
சென்னை அப்போலோ மருத்துவமனையில் நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்றுவந்த இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார். சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ். ரிசர்வ் வங்கி குடியிருப்பில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் குழுவினர்...
நீதித்துறை மீதான நம்பிக்கையை காக்க ஊழலை ஊக்குவிக்காதீர்கள்: தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அறிவுரை
admin - 0
நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள் என இளம் வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் அரசியலமைப்பு சட்டதின விழா மற்றும் 1,200 புதிய வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்யும் நிகழ்வு, சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்றார்....
சென்னையில் பெய்த மழை காரணமாக சாலையோரம் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக அன்றைய தினம் முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.
அதன்படி, மீனம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், ஐஸ் ஹவுஸ், நந்தனம், கிண்டி, மாமல்லபுரம், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர், கொளப்பாக்கம், மேற்கு தாம்பரம், எம்ஜிஆர் நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில்...
வடகிழக்குப் பருவமழையை யொட்டி விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தமிழகம் முழுவதும் பெய்துவருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணத்தால் சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது.
இதையடுத்து சென்னை அருகம்பாக்கம் மெட்ரோ அருகில் மற்றும் கோடம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதிகளில் உள்ள விருகம்பாக்கம்...
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து 400...










