மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் சுய பரிசோதனை செய்வது அவசியம்

0
32

மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் பெண்கள் சுய மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில், ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த 4 மாவட்டங்களில் இதுவரை 5.24 லட்சம் பேருக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை நடத்தப்பட்டதில் 2,555 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டது. அதேபோல, 2.20 லட்சம் பேரிடம் நடத்திய மார்பக புற்று நோய் பரிசோதனையில் 4,618 பேருக்கும், 1.75 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட கர்ப்பப்பை புற்று நோய் பரிசோதனையில், 9,331பேருக்கும் அறிகுறி கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் தொடர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

உலக அளவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகஅக்டோபர் மாதம் கடைபிடிக்கப்படும் நிலையில், பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் புற்றுநோயால் ஏற்படும் மொத்த உயிரிழப்பில் 70 சதவீதம், மார்பக புற்றுநோய் பாதிப்பால் ஏற்படுகிறது. பெரும் பாலானோர் புற்றுநோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வரு கின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, 30 வயதுக்கு மேற்பட் டோர் கட்டாயம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் பெண்கள் சுய மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப் போது, மார்பு சதைகள் இலகுவாக இருப்பதால், வலி, வீக்கம் போன்றவை இருந்தால் எளிதில் கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here