தமிழகத்தில் 2024 ஜன. முதல் செப். வரை இணையவழியில் ரூ.1,100 கோடி மோசடி: அமைச்சர் பிடிஆர் தகவல்
admin - 0
தமிழகத்தில் இணையவழி நிதிமோசடி மூலம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.1,100 கோடி பறிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கம் (அவார்) சார்பில் 27-ம் ஆண்டு சர்வதேச இணைய பாதுகாப்பு உச்சி மாநாடு சென்னை மணப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் இந்த மாநாடு ‘இணைய பாதுகாப்புக்கான போர்’ என்ற கருப்பொருளில்...
சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு உருவாக்கிய ப்ரோபா-3 இரட்டை செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
விண்வெளி ஆராய்ச்சியில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்துவரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, சூரியனை ஆராய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக் கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஎஸ்ஏ) வடிவமைத்தது. இவற்றை இந்தியாவின்...
காலநிலை மாற்றத்தை சமாளிக்க புயல், வெள்ள அபாயங்களை தடுக்கும் பணி தீவிரம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
admin - 0
காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், கடற்கரை மாவட்டங்களை புயல்களில் இருந்து பாதுகாத்தல், வெள்ள அபாயங்களை தணித்தல், கடல்நீர் உட்புகுவதை தடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காலநிலை மாற்றத்துக்கான நிர்வாக குழுவின் 2-வது கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் பேசியதாவது:
காலநிலை மாற்றம்தான் மனித சமுதாயம் எதிர்கொள்ள இருக்கும்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 – ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம்
admin - 0
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்விளையாட்டரங்கில் வைக்கப்பட்டு, பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த பணியை நேற்று ஆய்வு செய்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பெரியளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. கடந்த இரு நாட்களுக்கு முன்பு...
சாத்தனூர் அணை திறப்பில் செம்பரம்பாக்கம் போலவே தவறு செய்த திமுக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு
admin - 0
செம்பரம்பாக்கத்தில் நடந்த அதே தவறைத்தான் சாத்தனூர் அணை திறப்பில் திமுக அரசு செய்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு தெரிவித்துள்ள விவரங்களின்படி சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 119 அடி. அதன் கொள்ளளவு 7.32 டிஎம்சி. கடந்த நவம்பர் 30-ம் தேதி காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.55 அடி. அதாவது ஒன்றரை அடி நீர்மட்டம் உயர்ந்தாலே அணை நிரம்பி பேரழிவு...
தமிழக காவல் துறையில் புதிதாக தேர்வான போலீஸாருக்கு அடிப்படை பயிற்சி தொடக்கம்: டிஜிபி ஆய்வு
admin - 0
தமிழக காவல் துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீஸாருக்கான 7 மாத கால அடிப்படை பயிற்சி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் 2,665 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ம் தேதி வழங்கினார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாத கால அடிப்படை பயிற்சியும் ஒரு மாத கால நடைமுறை பயிற்சியும் அளிக்கப்படுவது...
மும்பையில் அம்பேத்கர் நினைவிடத்தை பிரதமர் விரைவில் திறந்து வைக்கிறார்: விசிக தலைவர் திருமாவளவன் தகவல்
admin - 0
மும்பையில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான ‘சைத்யபூமி’ பல ஏக்கர் பரப்பளவி்ல் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதை பிரதமர் மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அம்பேத்கர் நினைவு தினத்தில், சனாதனத்தை முறியடிக்க உறுதியேற்போம் என்றும் கூறியுள்ளார்.
அம்பேத்கர் நினைவு தினம் நாளை (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, விசிக தொண்டர்களுக்கு கட்சி தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சட்ட மேதை அம்பேத்கர் காலமாகி 68...
பஹ்ரைனில் கைதான 28 மீனவர்கள் டிச.10-ல் விடுவிப்பு: அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதில் கடிதம்
admin - 0
எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் அரசால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் டிச.10-ம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
எல்லை தாண்டிச் சென்றதாக பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.21 கோடியில் சிறப்பு மாணவ, மாணவியர் விடுதி: முதல்வர் திறந்து வைத்தார்
admin - 0
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த 2022 ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ``300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக்...
நூலகங்களுக்கு இடையே புத்தகங்கள் உள்ளிட்ட வளங்களை பரிமாறி கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்
admin - 0
நூலகங்களுக்கு இடையே புத்தகங்கள் உள்ளிட்ட வளங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெற்காசிய பல்கலைக்கழகம் மற்றும் நூலக தகவல் அறிவியல் கழகம் சார்பில் சர்வதேச நூலக உச்சி மாநாடு-2025 டெல்லியில் வரும் பிப்ரவரி 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான முன்னோட்ட அறிமுக நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில்...










