தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்நவ.9-ம் தேதி வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. இவற்றின் தாக்கத்தால், தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் நவம்பர் 9-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான...
தீபாவளிக்கு ஊர் சென்று சென்னை திரும்புவோரின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இன்று (நவ.4) பயணிகளின் நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 478 பேருந்துகளின் 3,529 பயண நடைகளுடன்...
சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பாத தொழிலாளர்களால் சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் சிறிது தொய்வு
admin - 0
சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் 30 முதல் 40 சதவீதம் பேர் மீண்டும் பணிக்கு திரும்பாததால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக, புதிய தொழிலாளர்களை பணிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் 116.1 கி.மீ. தொலைவுக்கு ரூ.63,246 கோடியில் நடைபெற்று வருகின்றன. அதாவது, மாதவரம் - சிறுசேரி வரை...
வாடகை வாகன ஓட்டுநர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக உரிமைக் குரல் ஓட்டுநர் சங்க பொதுச்செயலாளர் அ.ஜாஹிர்உசேன், தலைவர் இ.சே.சுரேந்தர் ஆகியோர் கூறியதாவது: தனியார் செயலி மூலம் இயங்கும் பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களால் வாடகை வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்நிறுவனங்களின் கீழ் வாகனங்களை ஓட்டும்போது ரூ.2 ஆயிரம் சம்பாதித்தால் ரூ.400 கமிஷனாகவும், ரூ.100 ஜிஎஸ்டி வரியாகவும் பிடித்தம்...
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: விரைவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
admin - 0
ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லியில் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொருரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும். இதில் முதல் கட்டமாக, 36 ரயில்களை ரூ.1,215.92 கோடி மதிப்பில் தயாரித்து வழங்க, அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா...
தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே நாளை மறுநாள் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்: சென்னை திரும்பும் பயணிகளுக்காக ஏற்பாடு
admin - 0
தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே நாளை மறுநாள் (திங்கள்) 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் வெளியூர் சென்றுள்ளனர். இவர்கள் விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (நவ.4) அதிகாலை முதல் சென்னை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிகளவில் வந்து இறங்கும் பயணிகள்,...
மதுரை, கோவை, சேலம், நெல்லை உட்பட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
admin - 0
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.2) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி,...
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை என்பதால், தீபாவளி விற்பனை களைகட்டியது. சென்னை மட்டுமின்றி,...
ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பொதுமக்கள் வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் செல்ல நான்கு மாதங்களுக்கு முன்பே, அதாவது 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்பவர்களுக்கு இந்த நடைமுறை மிகவும் வசதியாக இருந்தது. அதேநேரத்தில், இவ்வாறு முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்கள் பலர் தாங்கள் பயணம் செய்யும்...
தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர். சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் அதிகாலையிலே எழுந்து எண்ணெய் தேய்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறி வாழ்த்து தெரிவித்தனர். தெருக்களில் பட்டாசுகளை வெடித்து ஆரவாரத்துடன் தீபாவளியை தொடங்கினர். நண்பர்கள், உறவினர்களுடன் உணவருந்தி, சுற்றுலா...










