Google search engine
தவெக ஆட்சி சிறுவாணி நீரைப்போல தூய்மையானதாக இருக்கும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறினார். தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான 2-ம் நாள் பயிற்சிப் பட்டறை கோவை எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: தவெக அரசியல் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே எங்களிடம் இடமில்லை. மக்கள் நன்மைக்காக எந்த நிலைக்கும் செல்லத் தயங்க மாட்டோம். ஊழல்...
விவசாயிகள் தொழில்முனைவோராகவும், வணிகர்களாகவும் மாற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை. பட்டமளிப்பு விழா அரங்கில், ‘பாரதத்துக்கான வேளாண் கல்வி, புதுமை மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: இந்தியாவில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை...
நோயாளி​களின் உடல்​நிலை குறித்த விவரமறிந்​து, சிகிச்சை அளிக்க உதவும் ஆயுஷ்​மான் பாரத் சுகா​தார கணக்கு அடை​யாள அட்​டையை (ஆபா) ஆதார் மூலம் பதிவு செய்​து, பதி​விறக்​கம் செய்​ய​லாம். இதுகுறித்து பொது​மக்​களிடம் மாநில சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டுமென்று வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. தமிழக அரசின் முதல்​வர் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டம், மத்​திய அரசின் பிர​தான் மந்​திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்​டங்​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்​டு, ஒரு குடும்​பத்​துக்கு ரூ.5 லட்​சம்...
இந்திய ராணுவ முன்னாள் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எஸ். பட்டாபிராமன்(78) குன்னூரில் காலமானார். இவருக்கு 42 குண்டுகள் முழங்க, ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பட்டாபிராமன், ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். பாம்பே சாப்பர்ஸின் கர்னல் கமாண்டராகப் பணியாற்றியுள்ள இவர், இந்திய ராணுவத்தின் தகவல் அமைப்புகளின் முதல் இயக்குநராகவும், மேற்கு கட்டளையின் ராணுவ தளபதியாகவும்...
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரியில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், இதுவரை எந்தக் கட்சியிலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், நாதக-வில் தனக்கு என்ன நடந்தது... விலகலுக்கான காரணம்... எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மனம்திறந்து பேசினார் காளியம்மாள். மீனவக் குடும்பத்தில் பிறந்து ஒரு சமூக...
துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மே 3-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தபோவதாக உயர்​கல்வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வித்​துள்ளார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் உயர்​கல்​வித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்வி​களுக்கு பதிலளித்து அமைச்​சர் கோவி.செழியன் பேசி​ய​தாவது: பல்​கலைக்​கழக துணைவேந்​தர் நியமனத்தை மாநில அரசே மேற்​கொள்​ளும் மகத்​தான அறி​விப்பை உச்ச நீதி​மன்​றம் சென்று பெற்​று​வந்த முதல்​வருக்கு மே 3-ம் தேதி சென்​னை​யில் பாராட்டு விழா...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில்...
பல்கலைக்கழக துணைவேந்தர்களை போலீஸார் மிரட்டியதால்தான், அவர்கள் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் நேற்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கிவைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: தமிழகத்தில் கல்வித்தரம் கவலை அளிக்கிறது. மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம்...
தேசிய கல்விக் கொள்கை மூலம் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் பயிலலாம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 4-வது ஆண்டாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. ஊட்டி ராஜ்பவனில் நடந்த மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆர்.கிரிலோஸ்குமார் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கிவைத்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: பயங்கரவாதம் என்பது ஒற்றுமையாக கையாளப்பட வேண்டிய,...
போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 39-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. ராணுவ மருத்துவ சேவைகள் துறையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரீன் சிறப்பாக தேறிய 29 மாணவர்களுக்கு 40 தங்க பதக்கங்களை வழங்கினார். எம்பிபிஎஸ் மாணவி வி.சஞ்சனா 5 தங்கப் பதக்கங்களை பெற்றார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறைகளில் 637 முனைவர், முதுநிலை, இளநிலை மாணவ,...