Google search engine
பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தனது எக்ஸ் தளத்​தில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: திரு​மலா பால் நிறுவனத்​தின் கரு​வூல மேலா​ள​ராக பணி​யாற்றி வந்த நவீன் என்​பவர், அந்த நிறு​வனத்​தில் பணம் கையாடல் செய்​த​தாகக் குற்றச்சாட்டு எழுந்​ததை அடுத்​து, சென்னை கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜன் விசா​ரித்து வந்த நிலை​யில், சடல​மாக மீட்​கப்​பட்​டுள்​ளார். திருப்​புவனம் இளைஞர் அஜித்​கு​மார், காவல்​துறை​யின​ரால் அடித்​துக் கொல்​லப்​பட்ட துயர சம்​பவத்​தின் வடுமறை​யும் முன்​பே, மீண்டும்...
சாத்​தூரில் நடந்த மதி​முக கூட்​டத்​தில் காலி இருக்​கைகளை படம் பிடித்த ஊடகத்​தினரை “கேம​ராவை பிடுங்கி உடைத்​துப் போடுங்​கள்” என ஆவேசத்​துடன் வைகோ உத்​தர​விட்​டார். தொடர்ந்து ஊடகத்​தினரை கட்​சி​யினர் தாக்​கினர். விருதுநகர் மாவட்​டம் சாத்​தூரில் மதி​முக நெல்லை மண்டல செயல்​வீரர்​கள் கூட்​டம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ, முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ உள்​ளிட்​டோர் பேசினர். கூட்​டத்​தில் துரை வைகோ எம்​.பி. பேசி முடித்​ததும், சென்னை...
தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பயணத்​தின் ஒரு பகு​தி​யாக விழுப்​புரத்​தில் நேற்று பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட பழனி​சாமி, பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: ஃபெஞ்​சல் புயலை தமிழக அரசு முறையாக எதிர்​கொள்ளாததால் விழுப்​புரம் நகரமே தண்​ணீரில் மிதந்​தது. அதி​முக ஆட்​சி​யில் 2 முறை கூட்​டுறவு சங்​கங்​களில் விவ​சா​யிகளின் கடன்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டன. விழுப்​புரத்​தில் தொடங்​கப்​பட்ட ஜெயலலிதா பல்​கலைக்​கழகத்தை...
நிதி நிறுவன மோசடி வழக்​கில் மூன்​றாவது முறை​யாக ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் தாக்​கல் செய்​துள்ள மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அவருடைய சொத்து விவரங்​களை முழு​மை​யாக தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக, அந்​நிறு​வனத்​தின் இயக்​குனர் தேவ​நாதன் யாதவ் உள்பட 6...
பாமக-வன்​னியர் சங்க தஞ்​சாவூர், திரு​வாரூர் மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டம் கும்​பகோணத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பாமக நிறுவனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது: ஐந்து வயது குழந்​தை​போல நான் உள்​ள​தாக ஒரு​வர் (அன்புமணி) கூறி​னார். அந்​தக் குழந்​தை​தான் 3 ஆண்​டு​களுக்கு முன்பு அவரை தலை​வ​ராக்​கியது. தந்தை சொல்​மிக்கமந்​திரம் இல்லை. எனவே, என் பேச்சை கேட்​க​வில்லை என்​ப​தால், அவர் எனது பெயரை பயன்​படுத்​தக் கூடாது. எனது இனிஷியலை வேண்​டு​மா​னால் போட்​டுக் கொள்​ளலாம். இவ்வாறு அவர்...
வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு குறித்து துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வேதனை தெரிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் அண்மையில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் முடித்து வைக்கப்பட்டது. இருப்பினும் அது தொடர்ந் ததாகவே தெரிகிறது. இது பொதுச்செயலாளர் வரை மீண்டும் சென்ற நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி...
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கப்பெருமாள்கோவில் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 12 மின்சார ரயில்களின் சேவையில் இன்று (11-ம் தேதி) மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இன்று காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படும். காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு இன்று...
தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: ஜூலை மாதத்​துக்​கான மாதாந்​திர பொது​விநி​யோகத் திட்ட மக்​கள் குறைதீர் முகாம், சென்​னை​யில் உள்ள உணவுப் பொருள் வழங்​கல் மற்​றும் நுகர்​வோர் பாது​காப்​புத் துறை​யின் 19 மண்டல உதவி ஆணை​யாளர் அலு​வல​கங்​களில் நாளை (ஜூலை 12) காலை 10 முதல் பிற்​பகல் 1 மணி வரை நடை​பெறவுள்​ளது. குடும்ப அட்​டைகளில் பெயர் சேர்த்​தல், பெயர் நீக்​கல், முகவரி மாற்​றம், கைப்​பேசி எண் பதிவு அல்​லது மாற்​றம்...
 தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதன் நிர்வாக குழு சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, 2025 மே மாதம் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்த...
கம்​யூனிஸ்ட் கட்​சியை பற்றி பேச பழனி​சாமிக்கு தகுதி இல்லை என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் முத்​தரசன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, கோவை மாவட்​டம் வடவள்​ளி​யில் மேற்​கொண்ட பிரச்​சா​ரத்​தின்​போது, “தமிழகத்​தில் கம்​யூனிஸ்ட் கட்சி இருக்​கிற​தா, இல்​லையா என்ற முகவரியே இல்​லை’’ என்று விமர்​சித்​தார். இதற்கு கண்​டனம் தெரி​வித்து இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் வெளி​யிட்ட அறிக்​கை​: அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, சொந்​த​மாக...