இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: அயனாவரத்திலிருந்து சுரங்கப்பாதை தோண்டி பெரம்பூரை வந்தடைந்த ‘கல்வராயன்’ இயந்திரம்
admin - 0
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, அயனாவரத்திலிருந்து பெரம்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணியை `கல்வராயன்' இயந்திரம் வெற்றிகரமாக முடித்துள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான (45.4 கி.மீ.) 3-வது வழித்தடம் ஒன்றாகும். இதில் 28 சுரங்க...
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின் உத்தரவு
admin - 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட மொத்த நிவாரணத் தொகை ரூ.85 லட்சத்துக்கும் கூடுதலாக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மிகக்கொடுமையான குற்றசம்பவமாக கருதப்படும் இந்த வழக்கை விசாரணை செய்த...
அனைத்து காவல் நிலையங்களிலும் மகளிருக்கு உதவி மையம்: மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தகவல்
admin - 0
காவல் துறையில் பெண்கள் என்ற தலைப்பில் 11-வது 2 நாள் தேசிய மாநாடு வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் நேற்று தொடங்கியது மாநாட்டை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தொடங்கி வைத்தார். இன்று நடக்கும் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
பெண் காவலர்களை கவுரவிக்கும் வகையில் 11-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது செங்கல்பட்டு...
தமிழ் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அன்புடன் “இசைஞானி” என அழைக்கப்பட்டவர் இளையராஜா. அந்த பெயரே இன்றைக்கு தமிழரின் இசை அடையாளமாக உலகெங்கும் ஒலிக்கிறது.
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதும்,...
கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (மே 13) ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய...
‘தமிழரசு’ இதழ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் மார்பளவுச் சிலையை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்ட ‘தமிழரசு’ இதழ் 55-வது ஆண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி கடந்த 2023 ஜூன் மாதம் நடைபெற்ற செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டத்தில், முதல்வரின் ஆலோசனைப்படி தரமணியில் உள்ள தமிழரசு அச்சக வளாகத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு...
முக்கிய வழித்தடங்களில் ரயில் வேகம் அதிகரிப்பு: சென்னை – பாலக்காடு ரயில் உட்பட 4 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு
admin - 0
முக்கிய வழித்தடங்களில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு, ரயில் வேகம் அதிகரிக்கப்படுவதால், சென்னை - பாலக்காடு விரைவு ரயில் உள்பட 4 ரயில்களின் நேரம் ஜூலை 11-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110...
நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்கள் மறுபரிசீலனை: பிரதமர் அலுவலகத்துக்கு இபிஎப் ஆணையர் பதில்
admin - 0
நிராகரிக்கப்பட்ட உயர் பென்ஷன் தொடர்பான 279 விண்ணப்பங்களை மறுபரிசீலனை செய்வதாக பிரதமர் அலுவலகத்துக்கு வருங்கால வைப்பு நிதி நிறுவன ஆணையர் பதிலளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் 2022-ம் ஆண்டு நவ.4-ம் தேதியிட்ட உத்தரவின்படி, இபிஎஸ்- 95 திட்டத்தின்கீழ் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உயர் பென்ஷன் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள். அதன் அடிப்படையில், 2014-ம் ஆண்டு செப்.1-ம் தேதி-க்கு பிறகு, பணியில் இருக்கும் ஊழியர்களும், ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனமும் இணைந்து கூட்டு விருப்பம்...
துணிச்சலோடும், உறுதியோடும், கடமை உணர்வோடும் பணியாற்றிய இந்திய ராணுவத்துக்கு தலைவணங்குகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சமூகவலைத்தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: துப்பாக்கி சத்தம் மவுனமாகி அமைதி நிலவும் சூழலில், நாட்டு மக்களின் அமைதிக்காக தங்கள் இன்னுயிரை தந்தவர்களை கவுரவிக்கும் தருணம். இது. ஆபத்து நிறைந்த சூழலில் துணிச்சலோடும், கடமை உணர்வோடும், உறுதியோடும் பணியாற்றிய இந்திய ராணுவத்துக்கு தலைவணங்குகிறேன்.
நீங்கள்தான் இந்தியாவின் கவுரவம். இந்திய...
தி.நகர் ரங்கநாதன் தெரு ஜவுளிக் கடையில் திடீர் தீ விபத்து: ஊழியர்கள் அலறி அடித்து வெளியேறியதால் பரபரப்பு
admin - 0
தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவில் தரை தளம் மற்றும் 2 மாடிகளுடன் பிரபலமான ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு எப்போதும் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
நேற்று காலை வழக்கம்போல் கடை ஊழியர்கள் கடையை திறந்து பணியை கவனித்தனர். வாடிக்கையாளர்களும் வருகை தர ஆரம்பித்தனர். காலை 10.45...










