Google search engine
போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, எல்லையில் உள்ள கமாண்டர்களுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை...
‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், 40 பாகிஸ்தான் ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்தார். இந்திய படைகளின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ராணுவ டிஜிஎம்ஓ லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் கய், வைஸ் அட்மிரல் பிரமோத், ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பார்தி ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள்...
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லை மாநிலங்களில் 4 நாட்களுக்கு பிறகு, நேற்று அமைதி திரும்பியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா கடந்த 7-ம் தேதி மேற்கொண்டது. அன்று முதல் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்களிடம் பதற்றம் நிலவியது. எல்லை பகுதியை ஒட்டி உள்ள...
உ.பி.யில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அங்கு ஆண்டுக்கு சுமார் 100 ஏவுகணைகள் தயாராகும் என கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன மையமானது உ.பி.யின் பாதுகாப்பு தொழில் துறை வழித்தடத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இது...
ம​கா​ராஷ்டிர மாநிலம் புனே​வில் உள்ள டிஆர்​டிஓ அமைப்​பின் பொறி​யியல் பிரிவு தலை​வர் டலோலி கூறிய​தாவது: போர்க்​களம் மற்​றும் ராணுவ நடவடிக்​கை​களின்​போது வீரர்​களின் உயி​ரிழப்பை தடுக்க ரோபோக்​களை பயன்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இதற்​காக மனிதர்​களை போன்ற ரோபோ வீரர்​களை தயார் செய்​யும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்​டிருக்​கிறோம். கடந்த 4 ஆண்​டு​களாக மாதிரி ரோபோக்​களை தயார் செய்​திருக்​கிறோம். இந்த ரோபோக்​கள் கடின​மான மலைப்​பகு​தி​களில் எளி​தாக ஏறிச் செல்​லும். நாம் பிறப்​பிக்​கும் உத்​தர​வு​களை ஏற்று...
 ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஹைதராபாத் வருமான வரித் துறை ஆணையர் ஜீவன் லால் லவாடியா கைது செய்யப்பட்டு உள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ள வருமான வரித் துறை அலுவலகத்தின் ஆணையராக ஜீவன் லால் லவாடியா பணியாற்றி வருகிறார். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்திடம் இருந்து இவர் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்....
காஷ்மீரின் பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக இந்​திய முப்​படைகளும் பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தின. அதன்​பிறகு, இந்​தி​யா​வின் 15 நகரங்​களை குறிவைத்து கடந்த 8 மற்​றும் 9-ம் தேதி​களில் ட்ரோன்​கள், ஏவு​கணை​களை பாகிஸ்​தான் வீசி​யது. ஆனால், அவை அனைத்​தை​யும் இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட ஆகாஷ் ஏவு​கணை​கள் வானத்​திலேயே தவிடு பொடியாக்கின. இந்த ஆகாஷ் ஏவு​கணையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகத்​தின் (டிஆர்​டிஓ) விஞ்​ஞானி டாக்டர் பிரகலாத் ராமா​ராவ்​தான்...
பிஹாரின் பக்​ஸர் மாவட்​டம் நந்​தன் கிராமத்​தைச் சேர்ந்த சிப்​பா​யான தியாகி யாதவ் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பணியாற்றி வரு​கிறார். அவர் தனது திரு​மணத்​திற்​காக விடுப்பு எடுத்​துக் கொண்டு பக்​ஸர் வந்​திருந்​தார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்​தது. இதனிடையே, பஹல்​காம் தாக்​குதலுக்கு பின் எல்​லை​யில் பாகிஸ்​தானுடன் போர் தொடங்கி விட்​டது. இதனால், இந்​திய ராணுவம் தனது வீரர்​களின் விடுப்பை ரத்து செய்​து, உடனடி​யாக பணிக்கு திரும்​பு​மாறு அறி​வுறுத்​தி​யது. இதை ஏற்று திரு​மண​மான...
ஜம்மு எல்லையின் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார், 7 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் 4 நாட்கள் நீடித்தது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சர்வ எல்லையில் 2,000 கி.மீ தூரத்துக்கு எல்லை பாதுகாப்பு படை...
கேரளாவின் வளஞ்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. இதன்பிறகு...