Google search engine
ஹைதராபாத்தில் இருந்து நேற்று காலை திருப்பதிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து 80 பயணிகளுடன் நேற்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் திருப்பதிக்கு புறப்பட்டது. புறப்பட்ட 10 நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், ஹைதராபாத் விமான கட்டுப்பாட்டு அறைக்கு பைலட் தகவல் கொடுத்தார். உடனடியாக விமானத்தை தரை இறக்கும்படி உத்தரவு வந்ததால், அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதன்...
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 55-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கிய வாழ்க்கையும் பெற்றிட கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறியுள்ளார். இதுபோல் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின்...
பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு பல மாநிலங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. கடந்த 2024-ம் ஆண்டு நீட் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கேள்வித் தாள் தேர்வுக்கு முன்பே வெளியாயின. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் ஏற்கெனவே நடைபெற்ற பல அரசுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதே கும்பலுக்கு பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் மோசடியிலும் தொடர்பு...
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறை கடந்த மே மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, மாணவர்கள் விசா பெறுவதற்கான நேர்காணல் விரைவில் தொடங்கும். ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகளை பொது என்ற வகைமையில் அமைத்து மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு உடன்பட மறுக்கும் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். அமெரிக்கா மற்றும் அதன் அரசாங்கம், கலாச்சாரம்,...
நாட்​டின் ஐடி தலைநக​ராக பெங்​களூரு விளங்கி வரு​கிறது. இங்​குள்ள தனி​யார் நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள் சிலர், ஊழியர்​களின் தினசரி வேலை நேரத்தை அதி​கரிக்க வேண்​டும் என்று கர்​நாடக அரசுக்கு கடிதம் அனுப்​பினர். அதன் அடிப்​படை​யில், ஊழியர்​களின் வேலை நேரத்தை 10 மணி நேர​மாக உயர்த்த கர்​நாடக அரசு​முடி​வெடுத்​துள்​ளது. இதற்​காக கர்​நாடக தொழிலா​ளர் சட்​டத்​தில் திருத்​தங்​களை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி கர்​நாடக கடைகள் மற்​றும் வணிக நிறு​வனங்​கள் சட்​டத்​தின்​படி, தினசரி...
சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் தங்கள் சாதிக்கு பதிலாக ‘இஸ்லாம்’ என்று தங்கள் மதத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது என்று மவுலானாக்கள் தகவல் பரப்புவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்களும்...
குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி சேதம் அடைந்துள்ளதால், அதில் இருந்து விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல்களை பெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இதனால் அதை அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்புவது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கவுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த 12-ம் தேதி விபத்தில்...
குரோஷியா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு சென்றிருந்தார். இதில், முதலில் சைப்ரஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், 18-ம் தேதி அங்கிருந்து குரோஷியாவுக்கு சென்றார்....
ஆந்​தி​ரா​வில் ஜெகன் ஆட்​சி​யின் போது நடை​பெற்ற மது​பான கொள்கை ஊழல் குறித்த விசா​ரணை​யில் ரூ.1000 கோடிக்​கும் மேல் ஊழல் நடந்​துள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவ்​வழக்​கில் சந்​திரகிரி பேரவை தொகு​தி​யின் முன்​னாள் எம்எல்ஏ​வும், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முன்​னாள் சிறப்பு அறங்​காவலர் குழு உறுப்​பினரு​மான செவிரெட்டி பாஸ்​கர் ரெட்​டியை ஆந்​திர போலீ​ஸார் செவ்​வாய்க்கிழமை இரவு பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர். இவர் இலங்கை தப்​பிச்செல்ல முயன்​ற​தாக கூறப்​படுகிறது. இவ்​வழக்​கில் ஏற்​கெனவே கைதான முக்​கிய...
உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் மலையேற்றப் பாதையில் ஜங்கில்சாட்டி காட் அருகே நேற்று காலை 11.20 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அவ்வழியே சென்ற பக்தர்கள் மற்றும் போர்ட்டர்கள் இடிபாடுகளில் சிக்கி ஒரு...