Google search engine
விடுமுறை நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மற்​றும் நீதிபதி அகஸ்​டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு முன்பு நேற்று வழக்கு ஒன்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, வழக்​கறிஞர் ஒரு​வர் கோடை விடு​முறைக்​குப் பிறகு மனுவை பட்​டியலிடு​மாறு நீதிபதி அமர்​விடம் வலி​யுறுத்​தி​னார். இதைக்​கேட்டு கோபம் அடைந்து தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் கூறிய​தாவது: வழக்​கறிஞர்​கள் கோடை விடு​முறை நாட்​களில்...
 ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மும்பை, சென்னை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட நகங்களிலும் கரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், முந்தைய கரோனா அலையுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 106 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மும்பையில்...
 ‘‘வக்பு என்பது இஸ்லாமிய கருத்தாக இருந்தாலும், அது இஸ்லாமின் அடிப்படையான பகுதியாகக் கருதப்படுவதில்லை. எனவே, அரசியல்சாசனப்படி அதை அடிப்படை உரிமையாக கோர முடியாது’’ உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று கூறியது. வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து முக்கிய எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தன. இந்த மனு உச்ச...
சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஒரு காலத்தில் கிராமங்களுக்கு செய்திதாள்கள் கூட வருவது கடினம். ரேடியோ மூலமாக மட்டுமே நாம் செய்திகளை அறிய முடிந்தது. யார், யார் சட்டப்பேரவைகளில் நன்றாக பேசினார்களோ அவர்களை தங்கள் அரசியல் தலைவர்களாக மக்கள் ஏற்று கொண்டு...
இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார். இவர், ஜிஎஸ்எஸ் ஆக்ஸலரேட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆவார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: சர்வதேச மாணவர்களின் கனவான அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு என்பது இல்லை. அதுவும் முன்பைப் போல இந்தியா மாணவர்கள் அதுபோன்ற நாடுகளில் மிகவும் எளிதில்...
இந்​தியா - பாகிஸ்​தான் இடையி​லான சண்டை நிறுத்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் பங்கு எது​வும் இல்லை என்று மத்​திய வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி கூறி​யுள்​ளார். பாது​காப்பு தொடர்​பான நாடாளு​மன்ற குழு முன் வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி நேற்று மாலை ஆஜராகி ‘ஆபரேஷன் சிந்​தூர்’ குறித்து விளக்​கம் அளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: இந்​தியா - பாகிஸ்​தான் இடையி​லான மோதல் வழக்​க​மான ஆயுதங்​களை கொண்ட மோதலாகவே...
பெங்களூரில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய கன‌மழை அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால்...
திருப்பதி ஏழுமலையானுக்கு மைசூரு அரச பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதா தேவி 100 கிலோ எடையில் 2 அகண்ட வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக வழங்கினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் கர்ப்பகிரகத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மைசூரு மகாராஜா குடும்பத்தினர் மிகப்பெரிய (அகண்ட) வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த விளக்குகள் தான் சுவாமியின் இருபுறமும் எப்போதும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இவ்விளக்குகள் வழங்கி 300 ஆண்டுகள் ஆகிவிட்டதால்,...
ஹைதராபாத் சார்மினார் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குல்ஜார் ஹவுஸ் என்றழைக்கப்படும் பிரஹல்லாத் மோடி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 வயதுக்கு உட்பட்ட 8 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் துயரமான இந்த சம்பவம், அந்த கட்டிடத்திற்குள் காற்று வசதி இல்லாத காரணத்தினால் தான் நடந்தது...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், ஹரியானா, உ.பி. ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற எல்லையில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவச் செய்கிறது. மேலும் இந்தியாவில் பணத்துக்கு மயங்கும் ஆட்களை பிடித்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பெற்று சதி வேலையில் ஈடுபடுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பாகிஸ்தானின் உளவு நெட்வொர்க்கை தகர்க்கும் நடவடிக்கையில்...