ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வரும் சூழலில் பள்ளிகளுக்கு பிப்ரவரி 28 வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வருகிறது. நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.இந்நிலையில் ஜம்முவின் குளிர் மண்டலம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குளிர்கால...
வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு என அரசமைப்பு தினத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உருவாக்கப்பட்ட அரசியல் சாசன வரைவு, இந்திய அரசியல் நிர்ணய சபையால் கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையொட்டி ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி,...
உத்தர பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணிச்சுமை காரணமாக எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுகிறது. இந்நிலையில், எஸ்ஐஆர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த அதிகாரி சுதிர் குமார் (25)...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.
இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள உரி நீர் மின் நிலையத்தை குறிவைத்தும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு...
மும்பை தாக்குதலின்போது அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்டபோதும், தப்பித்த மும்பை பெண் அந்த பயங்கரமான இரவை நினைவு கூர்ந்துள்ளார்.
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு இரவில் படகில் வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்து நேற்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த மும்பை பெண்...
போக்குவரத்து நெரிசலை குறைக்க மும்பையில் சுரங்கப் பாதைகள்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல்
admin - 0
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நேற்று கூறியதாவது: மும்பையில் புதிய சாலைகள், மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மும்பை பெருநகர போக்குவரத்தின் சராசரி வேகம் ஒரு மணிக்கு 20 கி.மீ. ஆக இருக்கிறது.
காலை, மாலை நேரங்களில் 15 கி.மீ. ஆக இருக்கிறது. மும்பையின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண சுரங்கப்...
அடுக்குமாடி குடியிருப்பில் வாக்குச்சாவடி ஏன்? – தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மம்தா கடிதம்
admin - 0
மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
மே.வங்கத்தில் அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீதான அழுத்தம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் தற்போது இந்தப் பணிகளில்...
டெல்லில் காற்று மாசுபாட்டின் அளவை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி நகரின் பல இடங்களில் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் செல்வது தடைபட்டுள்ளதால் அவற்றுக்கு வழிவிடுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர்.
எனினும் போராட்டக்காரர்கள் நகர மறுத்ததால் அவர்களை போலீஸார் பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சிலர் போலீஸார் மீது...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சனத் நகரில் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளது. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வந்தனர்.
நேற்றும் வழக்கம்போல் மேற்கூரையில் பராமரிப்புப் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கீழ் தளத்தில் பணி செய்து கொண்டிருந்த 3...
காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது.
101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500...
