ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் ஆந்திரா பொருளாதார ரீதியாகமிகவும் பின்தங்கி விட்டது. கடன் சுமையும் அதிகமாகி விட்டதால் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவுங்கள் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முறையிட்டு உள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் முகாமிட்டு பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து, மாநிலபிரிவினை மசோதாவின் அடிப்படையில் ஆந்திராவுக்கு தேவையான நிதியை வழங்கி உதவிட வேண்டும்என்று கேட்டுக்கொண்டார்....
ஹாத்ரஸ் சம்பவத்துக்கு காரணமான நாராயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா எனும் சூரஜ்பால் ஜாத்தவ் முதன்முறையான ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு போலே பாபா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜுலை 2 சம்பவத்துக்கு பின் நாம் மிகவும் கவலையுடன் இருக்கிறோம். இந்த சங்கடத்திலிருந்து மீண்டுவர பிரபு நமக்கு சக்தி அளிக்க...
அக்னி வீரர் திட்டம் குறித்த சர்ச்சையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது புதிய தாக்குதல் தொடுத்துள்ளார். காப்பீடுக்கும், இழப்பீடுக்கும் வித்தியாசம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் இந்தியில் வெளியிட்டுள்ள வீடியோவில், அக்னி வீரர் அஜய் குமாரின் தந்தை தனது குடும்பம் ஒரு தனியார் வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் காப்பீடும் , ராணுவக் குழு காப்பீட்டு...
ஹாத்ரஸ் சம்பவத்துக்குப் பின் போலே பாபாவின் குவாலியர் ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை மத்தியப் பிரதேசத்தின் பாஜக அரசு எடுத்துள்ளது.
ஹாத்ரஸில் 121 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது நாரயண் சாக்கா விஷ்வ ஹரி போலே பாபா நடத்திய கூட்டம். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை துவக்கி உள்ளது. இதையடுத்து, அண்டை மாநிலங்களில் உள்ள போலே பாபாவின் ஆசிரமங்கள் மீதும் அதன்...
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 13-வது முதல்வராக ஹேமந்த் சோரன் நேற்று மீண்டும் பதவியேற்றார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நிலம் வாங்கிய விவகாரத்தில், முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. எந்நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், முதல்வர் பதவியை அவர் கடந்த ஜனவரி 31-ம் தேதி ராஜினாமா செய்தார். அன்றைய தினமே அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது கட்சியை...
ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டம், மாசர்லா சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மே 13-ம் தேதி தேர்தல் நாளன்று பாலய்யகேட் வாக்கு சாவடிக்குள் புகுந்து, அங்கிருந்த வாக்கு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்தார்.
இதனை தடுக்க வந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மறுநாள் இவரும், இவரது ஆதரவாளர்களும் காரம்பூடி எனும் இடத்தில்...
பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்: பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் சந்திரபாபு கோரிக்கை
admin - 0
டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் பொறுப்பேற்றார். அதன் பிறகு முதல்முறையாக டெல்லி சென்றுள்ள அவர், நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ராம்மோகன் நாயுடு, நிவாச வர்மா ஆகியோரை சந்தித்தார்.
பிரதமர் மோடியை...
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை விஸ்வ ஹரி நாராயண் (எ) போலே பாபா என்பவரது ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது நெரிசலில் 121 பேர் இறந்தது தொடர்பாக போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், போலே பாபா பெயர் அதில் இடம்பெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
போலே பாபா மீது பாலியல் வன்கொடுமை வழக்கும் உள்ளது.தற்போது...
ஆயுர்வேதத்துக்கு எதிரான நிறுவனங்கள் பதஞ்சலியின் நற்பெயரைக் கெடுக்க முயற்சி: பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு
admin - 0
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் நேற்று கூறியதாவது:
ஆயுர்வேத அடிப்படையில் நுகர்வோர் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக பெரு நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், அறிவுஜீவிகள் மற்றும்அரசியல்வாதிகள் ஆகியோர் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர். பதஞ்சலி தேசியவாதம், சுய பெருமையை பேசுகிறது. ஆனால், அந்த கூட்டணி அதை அழிக்க விரும்புகிறது. அதனால்தான், பதஞ்சலி பிராண்ட் குறித்த தவறான தகவல்களை மக்களிடையே அவர்கள் பரப்புகின்றனர்.
குறிப்பாக, ஆயுர்வேதம் மற்றும்இயற்கைப்...
மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், தெலங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற சோதனையில் ரூ.327கோடி மதிப்பிலான எம்டி போதைப்பொருள் மற்றும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து மகாராஷ்டிராவின் மிரா பயாந்தர் - வசாய் விரார் காவல்துறை ஆணையர் மதுக்கர் பாண்டே அளித்த பேட்டியில் கூறியதாவது:
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் செனா கான் என்றஇடத்தில் குற்றப் பிரிவு போலீஸார் கடந்த மே 15-ம் தேதி சோதனை நடத்தினர்....










