Google search engine
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆண்டு கர்நாடக‌ முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சிஐடி போலீஸார், அவரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஜூனில் 750 பக்க குற்றப்...
பாகிஸ்தான் பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கி, ரகசிய தகவல்களை அனுப்பிய, உ.பி. ஹஸ்ரத்பூர் ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்ரத்பூர் என்ற இடத்தில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு ராணுவத்துக்கு தேவையான பலவித ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு ரவீந்திர குமார் என்பவர் பணியாற்றுகிறார். இவருக்கு பேஸ்புக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த நேகா சர்மா என்பவர் கடந்தாண்டு...
ஹோலி பண்​டிகை நேற்று ஹைத​ரா​பாத்​தில் வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்​டது. தூல்​பேட்டை மல்சா புரம் எனும் இடத்​தில் நடந்த ஹோலி கொண்​டாடத்​தில் குல்ஃபி ஐஸ்​கிரீம்​கள், பர்​பிக்​கள், சில்​வர் காகிதத்​தில் ஒட்​டப்​பட்​டிருந்த இனிப்பு உருண்​டைகள் விநி​யோகம் செய்​யப்​பட்​டன. இதில் கஞ்சா கலந்​திருப்​பதை உணர்ந்த சிலர், இது குறித்து ரகசி​ய​மாக சிறப்பு அதிரடி படை​யினருக்கு தகவல் கொடுத்​தனர். அதன்​பேரில் உடனடி​யாக சிறப்பு அதிரடிப்​படை​யினர் சம்பவ இடத்​திற்கு வந்​து, அங்கு விழா ஏற்​பாடு செய்த...
டெல்லி மற்றும் ஆந்திராவில் முன்னாள் முதல்வர்கள் மிகவும் ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சொகுசு மாளிகைகளை என்ன செய்வது? என புதிய அரசுகள் குழம்பி வருகின்றன. டெல்லியில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியின் போது, அங்கு 8 ஏக்கர் பரப்பளவில் அரசு பங்களா ரூ.33 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. மக்கள் வரிப்பணத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி அர்விந்த் கேஜ்ரிவால் சொகுசு மாளிகை கட்டியதாக டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக குற்றம்...
மியான்மரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆன்லைன் மோசடி மையங்களில் பணிபுரிந்த மேலும் 266 இந்தியர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் தாயகம் திரும்பினர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விளையாட்டு மற்றும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் ஆன்லைன் மோசடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை நடத்துவது பெரும்பாலானோர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற மோசடி மையங்களில் பணிபுரிய அதிக...
மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தனக்கு 8 மொழிகள் தெரியும் என மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் 3 மொழிகள் கற்றுத் தரப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு திமுக, ஆதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும் தமிழக அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக காரசார விவாதம்...
ஹரியானாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் உள்ள 10-ல் 9 மாநகராட்சிகளில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஹரியானாவில் பரிதாபாத், ஹிசார், ரோத்தக், கர்னால், யமுனா நகர், குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய 7 மாநகராட்சிகளுக்கு கடந்த 2-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பானிப்பட் மாநகராட்சி தேர்தல் மற்றும் அம்பாலா மற்றும் சோனிபட் ஆகிய 2 மாநகராட்சிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. அதே நாளில் 21 நகராட்சிகளுக்கும் தேர்தல்...
இறை வணக்கத்தை உருது மொழியில் நடத்தியதாக பிஹாரிலுள்ள ஒரு பள்ளியின் முதல்வர், ஆசிரியர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பிஹார் மாநிலம் கயா மாவட்டம் அன்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஜமால்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 8-ம் தேதி காலை உருது மொழியில் இறை வணக்கம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. பள்ளியின் முதல்வர், ஆசிரியர் ஆகியோர் இறை வணக்கத்தை உருதுமொழியில் நடத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம்...
தொகுதி மறுவரையறையால் ஆந்திராவில் 75 கூடுதல் பேரவை தொகுதிகள் ஏற்படும். அந்த 75 தொகுதிகளும் பெண்களுக்காக ஒதுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அமராவதியில் நடைபெற்று வரும் பட்ஜெட் பேரவை கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கலந்து கொண்டார். அப்போது மகளிர் நலன் குறித்து அவர் பேசியதாவது: என்னுடைய ஆட்சியில் எந்த ஒரு நல திட்டங்களை அமல் படுத்தினாலும் அதில் பெண்களின் நலன் முன்னிறுத்தப்படும். நாங்கள்...
நடிகை சவுந்தர்யாவின் மரணத்தின் பின்னணியில், நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்புள்ளதா ? என விசாரணை நடத்த கோரி தெலங்கானா மாநிலம் கம்மம் காவல் துணை ஆய்வாளரிடம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தென்னிந்திய திரைத்துறையில் புயலை கிளப்பி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சவுந்தர்யா. குடும்பப்பாங்கான நடிகை என இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. தமிழில் நடிகர்...