Google search engine
மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகத்தில் வகுப்பறையில் முதலாமாண்டு மாணவர் ஒருவரை பேராசிரியர் திருமணம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பேராசிரியை தனது பணியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவி்த்துள்ளார். கொல்கத்தாவில் மாநில அரசுக்கு சொந்தமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்ஏகேஏயுடி) உள்ளது. இங்கு அப்ளைடு சைக்காலஜி துறையின் தலைவராக பெண் பேராசிரியை உள்ளார். இவர் தனது துறையின் முதலாமாண்டு மாணவரை வகுப்பறையிலேயே...
மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில் ஏற்பட்டுள்ள ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று தண்ணீர் மூலம் பரவியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் கடந்த மாதம் ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று பரவியது. அங்கு இதுவரை 166 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொற்றுக்கு அங்கு ஏற்கெனவே 6 பேர் இறந்திருந்த நிலையில், சென்னையில் உள்ள குழந்தை சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 10 வயது சிறுவன் கடந்த மாதம் 31-ம் தேதி...
அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் முதல் கட்டமாக 104 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அமெரிக்​கா​வில் கடந்த மாதம் 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவி​யேற்​றார். அதன் பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஐ.நா அமைப்பு​களில் இருந்து வெளி​யேறு​வது, உலக சுகாதார நிறு​வனத்​தில் இருந்து வெளி​யேறு​வது, வங்கதேசம், பாகிஸ்தானுக்கு வழங்​கும் நிதி​யுதவியை நிறுத்து​வது, டிக்டாக் செயலிக்கு நிபந்தனை விதிப்பு என பல்வேறு உத்தர​வுகளை பிறப்​பித்​துள்ளார். குறிப்பாக அமெரிக்​கா​வில் முறையான...
பிர​யாக்​ராஜின் மகா கும்​பமேளா​வில் வசந்த் பஞ்சமி புனித குளியலை முடித்​துக் கொண்ட துறவி​களில் பலரும் வாராணசி, அயோத்​திக்கு செல்​கின்​றனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்​ராஜில் 144 ஆண்டு​களுக்கு பிறகு மகா கும்​பமேளா நடைபெறுகிறது. இந்த விழா திரிவேணி சங்கம கரைகளில் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்​கியது. இதில் மகர சங்க​ராந்தி, மகா பவுர்​ணமி, மவுனி அமாவாசை, வசந்த் பஞ்சமி, மகா சிவராத்​திரி என மொத்தம் 6 வகையான ராஜ...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் மூத்த குடிமக்கள் பங்கேற்பதற்காக அம்மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தேசிய மெடிகோஸ் கூட்டமைப்பு மற்றும் அலிம்கோ ஆகியற்றுடன் உத்தர பிரதேச அரசின் சமூக நலத்துறை இணைந்து மூத்த குடிமக்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு முதியோர் இல்லங்களில் இருந்து வருபவர்களுக்காக 100 படுக்கைகள் கொண்ட ஆசிரமம் கும்பமேளா...
அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை கேரள அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சாங்கு. இவனுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவு. ஆனால் இவன் செல்லும் அங்கன்வாடியில் அடிக்கடி உப்புமா வழங்குகின்றனர். இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. ‘‘அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’’ என சிறுவன் சாங்கு கூறியதை அவனது தாய் செல்போனில் வீடியோ...
புதிதாக 10 ஆயிரம் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 10 ஆயிரம் முதுநிலை படிப்புக்கான இடங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இரங்கியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 1.2 லட்சம் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன....
சீன படைகள் இந்திய மண்ணில் ஊடுருவியுள்ளதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்காக அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சபாநாயகரிடம் பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ராகுல் தனது உரையில் கொஞ்சமும் கூச்சமின்றி வரலாற்று மற்றும் ஆதாரப்பூர்வமான உண்மைகளை திரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், தாய்நாட்டை கேலி செய்து நமது குடியரசின்...
தேச நலன் சார்ந்த விஷயங்​களில் ராகுல் காந்தி பொறுப்​பற்ற அரசியல் செய்​வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்​டி​யுள்​ளார். சீனா​வுடனான எல்லைப் பிரச்​சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்​தும் மக்களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்திருந்​தார். சீனர்கள் நமது எல்லைக்​குள் இருப்​பதாக ராணுவத் தளபதி கூறுகிறார் என்றும் ராகுல் காந்தி கூறி​யிருந்​தார். இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் பாது​காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி​யிருப்​ப​தாவது: இந்தியா மற்றும்...
தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுளது. இது அரசின் நலத்திட்ட உதவி வழங்க பயன்படுத்தப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். இதுகுறித்து தெலங்கானா சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என கடந்த 2024 பிப்ரவரியில் தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய கர்நாடகா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு தெலங்கானாவில் தொடர்ந்து 50...