Google search engine
மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன் குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் கிண்டல் செய்தது சர்ச்சையாகியுள்ளது. அந்த காமெடியனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சார்ந்த ஹேபிடட் கன்ட்ரி கிளப், அவரது நிகழ்ச்சி நடந்த நட்சத்திர ஹோட்டல் ஆகியனவற்றை சிவசேனா தொண்டர்கள் சூறையாடினர். மேலும் அவரது நிகழ்ச்சி படமாக்கப்பட்ட ஹோட்டலையும் தாக்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா,...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை, வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக ஏப்ரல் 3-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது. கடந்த 2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. உ.பி.யின் சுல்தான்பூரில் பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா தொடந்த இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில்...
ஆந்திர மாநிலம் அமராவதியில் சட்டப்பேரவைபட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சபாநாயகர் அய்யண்ண பாத்ருடு நேற்று கூறியதாவது: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களான பாலநாகி ரெட்டி, சந்திரசேகர், மச்ச லிங்கம், விருபாட்சி, விஸ்வேஸ்வர ராஜு, அமர்நாத் ரெட்டி, தாசரி சுதா ஆகியோர் பட்ஜெட் கூட்டத்தில் ஆஜராகமேலேயே பேரவைக்கு வந்து, இங்குள்ள பதிவேட்டில் ரகசியமாக கையெழுத்திட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இது சரியில்லை. மக்கள் பிரச்சினைகளை அவர்கள் பேரவையில் பேச...
வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தனது புகழைக் கெடுக்கும் முயற்சிகளில் பாஜக மற்றும் இடதுசாரிகள் ஈடுபட்டு வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது: பொறாமைக்கு மருந்து இல்லை. லண்டனுக்கு சென்று அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்ற உள்ள நிலையில் எனது புகழை கெடுக்க எதிர்க்கட்சிகள் சதி செய்து வருகின்றன. என்னை கேவலப்படுத்துவதாக நினைத்து அவர்கள் நாட்டின் புகழுக்குத்தான் களங்கம் விளைவிக்கின்றனர்....
தங்க கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், அவரது வளர்ப்பு தந்தை டிஜிபி ராமசந்திர ராவ் குறித்து அவதூறு செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது...
நாடு முழுவதும் எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமுதாய ஜனநாயக (எஸ்டிபிஐ) கட்சி கருதப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் எஸ்டிபிஐ தேசிய தலைவர் பைஸி கடந்த 3-ம் தேதி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,...
மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டு 2 நாட்களுக்கு பின்பும் பதற்றம் நிலவுகிறது. பள்ளிகள், கடைகள் மூடப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குகி இனத்தவர் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஏற்பட்ட மோதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இங்கு தொடர் கலவரம் நிலவியதால், குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஹமர் இன்புயி பிரிவைச் சேர்ந்த பொதுச் செயலாளர் ரிச்சர்ட்...
உ.பி.யில் கடந்த 2017 முதல் நில மாபியா கும்பல்களிடம் இருந்து 64 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். இது தொடர்பாக அரசு விழா ஒன்றில் அவர் நேற்று பேசியதாவது: உ.பி.யில் 2017-ம் ஆண்டுக்கு முன் நில உரிமை மாற்றம், எல்லை நிர்ணயம், பயன்பாட்டு உரிமைகள் உள்ளிவை தொடர்பாக 33 லட்சத்துக்கும் மேற்பட்ட தீர்க்கப்படாத தகராறுகள் இருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகளை தீர்ப்பதற்கு...
ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ராணுவத்தில் தற்போது 105 மற்றும் 130 எம்எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக 155 எம்எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில் இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த...
உ.பி.​யின் சம்​பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்​டு​தோறும் முஸ்​லிம்​கள் ஒரு விழா நடத்​துகின்​றனர். இந்த விழா​வானது சையது சாலார் மசூத் காஜி என்​பவர் பெயரில் கடந்த 47 ஆண்​டு​களாக நடக்​கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 25-ல் தொடங்க இருந்த விழாவுக்கு சம்​பல் மாவட்ட காவல் துறை அனு​மதி அளிக்க மறுத்​துள்​ளது. இதற்கு நம் நாட்​டின் மீது படையெடுத்​தவர்​களை​யும், கொள்​ளை​யடித்​தவர்​களை​யும் கொண்​டாட தேவை​யில்​லை” என்று காரணம் கூறி​யுள்​ளது. கஜ்​னா​வி​யில் இருந்து...