Google search engine
மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்​டும் என்று வலி​யுறுத்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ராணுவ மோதல்​கள் மூலம் எந்​தவொரு பிரச்சனைக்​கும் தீர்வு காண முடி​யாது என்​பதை பின்​லாந்து அதிபர் உடனான சந்​திப்​பின்​போது திட்​ட​வட்​ட​மாகத் தெரிவித்துள்ளார். இந்​தி​யா​வுக்கு நான்கு நாள் அரசு​ முறைப் பயண​மாக வந்​துள்ள பின்​லாந்து அதிபர் அலெக்​சாண்​டர் ஸ்டப்​புடன், பிரதமர் மோடி நேற்று விரி​வான பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்போது இரு தரப்பு உறவுகளை...
கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்காக அமைச்சகங்கள் செய்த பணிகளின் விவரத்தைக் கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இவற்றை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார். கடந்த 2024-ல் நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், முக்கியப் போட்டியாளரான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றார். இவருடன் பதவியில் அமர்ந்த மத்திய...
இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி அதிகாலை ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்து அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது. இலங்கையின் காலே பகுதியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. இது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக...
மாநிலங்களவை உறுப்பினராகும் முதல்வர் நிதிஷ் குமாரால் பிஹார் அரசியலில் பாஜக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையொட்டி நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியினர் ஆதரவு, எதிர்ப்பு என இரு வேறு கருத்துகளுடன் பிளவுபட்டுள்ளனர். பிஹாரில் 10-வது முறை முதல்வராக சுமார் 20 வருடங்களாகத் தொடர்கிறார் ஜேடியுவின் தலைவரான நிதிஷ் குமார். தற்போது அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக செல்வது பிஹார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம்,...
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்பு அறுந்துபோனது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணிகளை இந்திய விமானப் படை அதிகாரிகள் தொடங்கினர். இந்நிலையில் அந்த விமானம் அசாம் மாநில கார்பி அங்கிலாங் அருகிலுள்ள சோக்கி ஹோலா என்ற இடத்தில் நொறுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் மீட்புப் பணியில்...
இந்​தியா முழு​வ​தி​லும் நேற்று ஹோலி பண்​டிகை விமரிசை​யாகக் கொண்​டாடப்​பட்​டது. வண்​ணம் பூசுதல், சேற்றை இறைத்​தல், உடைகளை கிழித்து விளை​யாடு​தல் என பல்​வேறு வகை​யில் மக்​கள் ஹோலியை கொண்​டாடி மகிழ்ந்​தனர். புராண வரலாற்​றின் அடிப்​படை​யில் ஹோலி பண்​டிகை நாளில் ‘ஹோலிகா தெஹன்‘ எனும் பெயரில் ஒரு சடங்கு நடத்​தப்​படு​கிறது. இதற்​காக, 10 நாட்​கள் முன்​பாக ஒவ்வொரு நகரம் அல்​லது கிராமங்​களின் முக்​கிய சந்​திப்​பு​களில் காய்ந்த மரக்​கிளை​களை கொண்​டு​வந்து குவிக்​கின்​றனர். இதற்கு நாள்​தோறும் அப்​பகுதி...
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த மோகன் தாஸ் (71), நாகராஜு ராவ் (61), குசுமா (61), ஜெயந்தி (59), பூஜா (33) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காரில் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தனர். அப்போது பெங்களூரு - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்,...
காஷ்மீரின் பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிரவாதிகள், சீனா​வில் அதிநவீன கேம​ரா​ வாங்​கியது கண்​டு​பிடிக்கப்பட்டுள்​ளது. இது குறித்து சீனா​விடம் உதவி​கள் கோர தேசிய புல​னாய்வு ஏஜென்​சிக்கு நீதி​மன்​றம் அனு​மதி வழங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஆண்டு ஏப்​ரல் 22ம் தேதி பாகிஸ்​தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிர​வா​தி​கள் தாக்குதல் நடத்​தினர். இதில் சுற்​றுலா பயணி​கள் 25 பேர், உள்​ளூர் குதிரை பராமரிப்​பாளர் ஒரு​வர் என 26 பேர்...
வரும் மாநிலங்​களவை தேர்​தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்​கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்​களில் வெற்றி பெறும் நிலை​யில் உள்​ளது. இதில் ஒன்​றில் மத்திய அமைச்சர் ராம்​நாத் தாக்​கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்​றொரு இடத்துக்கு இன்​னும் வேட்​பாளர் உறுதியாகவில்​லை. இந்​நிலை​யில் நிதிஷ் குமார் முதல்​வர் பதவியி​லிருந்து வில​கி, மாநிலங்​களவை தேர்​தலில் போட்​டி​யிடு​வார் எனவும் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​பார் எனவும் பாஜகவை சேர்ந்த...
ஸ்ரீநகர் மத்​திய சிறை​யின் கண்​காணிப்​பாள​ராக முதன்​முறை​யாக பெண் அதி​காரி ஒரு​வர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக கடந்த திங்​கட்​கிழமை மாலை வெளி​யான அரசு உத்​தர​வின்​படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்​வேறு சிறை​களுக்கு 4 அதி​காரி​கள் கண்​காணிப்​பாளர்​களாக நியமிக்​கப்​பட்​டனர். இவர்​களில் ஸ்ரீநகர் மத்​திய சிறைக்​கான பொறுப்பு 2012ம் ஆண்டு பேட்ச் அதி​காரி சபா ஷாலுக்கு வழங்​கப்​பட்​டது. சபா ஷால் இந்த நியமனத்​துக்கு முன், ஜம்மு காஷ்மீர் சிறை​கள் துறை தலைமை இயக்​குநர் அலு​வல​கத்​தில்...