முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணை கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழக பொதுப் பணித் துறை அணையைப் பராமரித்து வருகிறது. முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து...
ஆஸ்திரேலிய பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தோனி அல்பனீஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
21 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அப்போது வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி...
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பிரதமரின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்படவில்லை: கார்கே குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
admin - 0
காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பில் மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டே பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
உளவுத் துறையின் தகவலை காஷ்மீர் போலீஸார், எல்லை...
சாலை விபத்தில் காயமடைவோருக்கு இலவச சிகிச்சை வழங்கப்படும்: மத்திய சாலை போக்குவரத்து துறை தகவல்
admin - 0
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயம் அடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள், முதல் 7 நாட்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும்ம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச...
உ.பி. புதிய உள்துறை சிறப்பு செயலாளர் தினேஷ் குமார்: முதல்வர் யோகி அரசில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும் தமிழர்கள்
admin - 0
உத்தரபிரதேச அரசின் உள்துறை சிறப்பு செயலாளராக அண்ணாவி தினேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில் தமிழ்நாட்டை சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகின்றனர்.
கரூரின் சோமூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயி அன்னாவி. இவரது மூத்த மகனான அண்ணாவி தினேஷ் குமார், கடந்த 2012-ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று உ.பி. அதிகாரியானார். இவர், ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர். உ.பி. உயர்...
நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் பிஹாரில் 7 பேரும் நுழைவுச் சீட்டு மோசடி தொடர்பாக கேரளாவில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போலி தேர்வர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப மோசடி சாதனங்களை உள்ளடக்கிய ஒரு மோசடியை போலீஸார் முறியடித்தனர்.
இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் ஜெய்ப்பூரின்...
சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது ரயில் பெட்டியைப் போல மாறிவிட்டது. இந்த பெட்டியில் இடம் கிடைத்து ஏறியவர்கள் அடுத்தவரை ஏறுவதற்கு அனுமதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள பி.ஆர். கவாய்க்கு பிறகு இந்த ஆண்டின் இறுதியில் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்க உள்ளார்.
மகாராஷ்டிராவில்...
கர்நாடகாவில் கடந்த 2011-ல் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் ஜனார்த்தன ரெட்டி சுற்றுலா, தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் கர்நாடகாவில் பெல்லாரி, பீஜாப்பூரிலும், ஆந்திராவில் அனந்தப்பூரிலும் சுரங்க நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் இரும்பு தாதுக்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தியதாக ஜனார்த்தன ரெட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக்கில் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது....
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் மே 28-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைப்பு
admin - 0
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு போர்க்கப்பல்களின் விலை ரூ.8,000 கோடி ஆகும்.
இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் முதல்...
ஆபரேஷன் சிந்தூர்: எல்லையில் பாகிஸ்தானின் பதில் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் காயம்
admin - 0
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 3 பேர் பேர் உயிரிழந்தனர்; 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியா...










