Google search engine
சூர்​யா, த்ரிஷா நடித்து வெளி​யான திரைப்​படம், ‘கருப்​பு’. ஆர்.ஜே பாலாஜி இயக்​கி​யுள்ள இப்​படத்தை ட்ரீம் வாரியர் பிக்​சர்ஸ் சார்பில் எஸ்​.ஆர்​.பிர​காஷ் பாபு, எஸ்​.ஆர்​.பிரபு தயாரித்​துள்ளனர். இப்​படம் உலகம் முழு​வதும் இது​வரை ரூ.200 கோடிக்​கும் அதிகமாக வசூலித்​துள்​ளது. இப்​படம் வெற்​றிகர​மாக ஓடிக் கொண்​டிருப்பதை அடுத்து, செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​தார் நடிகர் சூர்யா. அப்​போது அவர் கூறிய​தாவது: ‘கருப்​பு’ படத்தை அரை மணி நேரத்தில் முடிவு பண்​ணினேன், இதில் நடிக்கலாம் என்​று. வேறு எந்​தப் படத்​தை​யும்...
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைத் துறை ஒதுக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து தெரிவித்த கருத்துக்கு பதிலடி தந்துள்ள நடிகர் கிருஷ்ணா, “நம் முதல்வரும் புதியவர்தான்” என்று குறிப்பிட்டுள்ளார். விஷால் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் கிருஷ்ணா தனது எக்ஸ் தளத்தில், “விஷால் அவர்களே, அமைச்சர் ராஜ்மோகனையோ அல்லது அவரது திறன்களையோ குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர் தனது துறையை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறார் என்பதை அறியாமலே அவரது அமைச்சகத்தின் செயல்பாடுகளை உங்களால்...
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் புதிய அமைச்சரவை, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கூட்டணி அமைச்சரவையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார். இது குறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், “சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்க்கும் எனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும்...
அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அருள்நிதி நடித்துள்ள ‘டிமாண்ட்டி காலனி 3’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் அஜய் ஞானமுத்து. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றி இருக்கிறார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் அஜய்...
பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘பரிமளா & கோ’. இதில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி மாஸ்டர், அனந்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  இதில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது: “இப்படத்தின் கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு ‘பரிமளா ஃபேமிலி’ என்ற தலைப்பு வைத்திருந்தோம். பிறகு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தலைப்புகள் வந்ததால் மாற்றலாமா என்று யோசித்தோம்....
ஒய்​.ஜி.மகேந்திரா முதன்மை கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்ள திரைப்​படம், ‘சா​ரு​கேசி’. இதில் சத்​ய​ராஜ், சமுத்​திரக்​க​னி, சுஹாசினி மணிரத்​னம், தலை​வாசல் விஜய், ரம்யா பாண்​டியன், ராஜ் ஐயப்​பன், மது​வந்தி மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். அருண். ஆர் தயாரித்​துள்ள இந்​தப் படத்​தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்​கதை எழுதி இயக்கி உள்​ளார். பாடல்​கள், வசனம் பா. விஜய். தேவா இசையமைத்​துள்​ளார். இ5 என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் சார்​பில் ஜே. ஜெயகிருஷ்ணன் வெளி​யிடு​கிறார். ஒய்​.ஜி.மகேந்​திரா இதே பெயரில் நடத்​திய நாடகத்​தைத் திரைப்​பட​மாக்கி உள்​ளனர். “இப்​படம்,...
ஜூன் 26-ம் தேதி ’கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கான் சிட்டி’. இப்படத்தின் அறிமுக வீடியோ மற்றும் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்...
‘கருப்பு’ படத்தின் வெற்றி குறித்து ஜோதிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மே 15-ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ வெளியானது. இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடித்த படம் மாபெரும் வசூல் வெற்றி பெற்றிருப்பதால் ஜோதிகா பெரும் உற்சாகமாகி இருக்கிறார். இது குறித்து ஜோதிகா அளித்த பேட்டியில், “‘கருப்பு’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். எங்களுக்கு...
“பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். சமூக நீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது. நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும்...
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஜி.டி.நாயுடு’ திரைப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வந்த படம் ‘ஜி.டி.நாயுடு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது இதன் தமிழக உரிமையினை ஏஜிஎஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கிருஷ்ணகுமார்...