சூர்யாவின் ‘கருப்பு’ வெற்றி: ஜோதிகா நெகிழ்ச்சி

0
116

‘கருப்பு’ படத்தின் வெற்றி குறித்து ஜோதிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மே 15-ம் தேதி சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ வெளியானது. இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடித்த படம் மாபெரும் வசூல் வெற்றி பெற்றிருப்பதால் ஜோதிகா பெரும் உற்சாகமாகி இருக்கிறார்.

இது குறித்து ஜோதிகா அளித்த பேட்டியில், “‘கருப்பு’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சூர்யா மிகச் சிறப்பாக நடித்திருந்தார். எங்களுக்கு கிடைத்த இந்த அன்பினால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறோம். இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. நிஜத்தில் எங்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

‘சிங்கம் 2’ படத்துக்குப் பிறகு வசூல் ரீதியில் சூர்யாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி ‘கருப்பு’ என்று விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பங்குத் தொகையாக ரூ.60 கோடிக்கு அதிகமாகவும், உலகளவில் பங்குத் தொகையாக ரூ.120 கோடிக்கு அதிகமாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here