Google search engine
சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் இயல்பான மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் நாடகத்தில் இருந்து, கொத்து கொத்தாக சினிமாவுக்கு வந்தவர்கள், தவிர்க்க முடியாத நடிகர்களாக மாறினார்கள். இப்போது அவர்களே நமது முன்னோடி அடையாளங்களாக இருக்கிறார்கள். பிறகு சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள், சினிமாவில் தங்களுக்கான இடத்தைப் போராடிப் பிடித்திருக்கிறார்கள். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம் என பலரை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். அதே போல யாராவது ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக...
கடந்த 2009இல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இலங்கையின் வடகிழக்குக் கடற்கரை ஊர்களில் ஒன்றான முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்தது. அதில் புலிகள் அமைப்பின் போராளிகளும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களும் இலங்கை ராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதை பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல் 4 தனக்குக் கிடைத்த காட்சிகளின் வழியாக உறுதி செய்தது. அதேபோல், அப்போரில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை இலங்கை ராணுவம்...
கே.பி.ஜெகன் இயக்கி நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’! விஜய் நடித்த ‘புதிய கீதை’, நந்தா நடித்த ‘கோடம்பாக்கம்’, சேரன் நடித்த ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். இவர், மாயாண்டி குடும்பத்தார், மிளகா, நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது 'ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை இயக்குகிறார். உண்மை சம்பவத்தைத் தழுவி உருவாகும் இப்படத்தில் அவர், கதையின் நாயகனாக...
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து, உருவான இந்திப் படம், ‘எமர்ஜென்சி’. கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்து, இயக்கியிருந்தார். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அவரும் தயாரித்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜனவரி மாதம் ரிலீஸான இந்தப் படம் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர், “என்ன ஒரு படம். இது...
ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக...
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலாக ‘ஓஜி சம்பவம்’ பாடல் செவ்வாய்க்கிழமை மாலை வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு படக்குழு பாடல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து பாடி உள்ளனர். அவர்களோடு ஆறு பேர் கோரஸ் பாடி உள்ளனர். இந்த பாடலின் வரிகளை...
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் (56). இண்டிபண்டன்ஸ் டே, மென் இன் பிளாக், பேட் பாய்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இசைக்கலைஞருமான இவர், இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். முதலில் சிலருடன் இணைந்து பாடல்களை வெளியிட்டு வந்த அவர், 1997-ம் ஆண்டு தனியாக ‘பிக் வில்லி ஸ்டைல்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இது அப்போது வரவேற்பைப் பெற்றது. கடைசியாக, 2005-ம் ஆண்டில், ‘லாஸ்ட் அன்ட் பவுன்ட்’ என்ற...
‘​காதலில் சொதப்​புவது எப்​படி?’, ‘கா​விய தலை​வன்’, ‘இறு​திச்​சுற்​று’, ‘விக்​ரம் வேதா’ என பல படங்​களை, தனது ஒய் நாட் ஸ்டூடியோ சார்​பில் தயாரித்​தவர் எஸ். சஷி​காந்த். இவர் ‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். மாதவன், சித்​தார்த், நயன்​தா​ரா, மீரா ஜாஸ்​மின் இணைந்து நடித்​துள்ள இந்​தப் படம் நெட்​பிளிக்ஸ் ஓடிடி தளத்​தில் ஏப்​.4-ல் நேரடி​யாக வெளி​யாகிறது. இந்​தப் படம் குறித்து சஷி​காந்​திடம் பேசினோம். இந்​தப் படத்​துல பெரிய நட்​சத்​திரங்​கள்...
‘புஷ்பா 3’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் ரவி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்து சாதனை புரிந்த படம் ‘புஷ்பா 2’. சுமார் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஆனால், அப்படத்தின் கதை இன்னும் முடியவில்லை. இதனால் ‘புஷ்பா 3’ எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் ரவி இதற்கு பதிலளித்துள்ளார். ‘புஷ்பா 3’ தொடர்பான...
ஆர்யா நடிப்பில் பிரபலமான ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. ’கில்லி’ படத்தின் மாபெரும் வெற்றியால், பல்வேறு பழைய படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பட்டியலில் இணைந்துள்ளது ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் இது. இதன் காமெடி காட்சிகள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மார்ச் 21-ம் தேதி ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது....