மகாபாரதம் தொடரை இயக்கிய இந்தி இயக்குநர் முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்துள்ளார்.
சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஜூன்...
நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ, மாநாடு, வணங்கான் உள்ளிட்ட படங்களைத் தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இப்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இவர் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில், “எமது நிறுவனத் தயாரிப்பில் எந்த படத்துக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு...
நடிகர் கார்த்தி, ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இதில் ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் என பலர் நடித்துள்ளனர்.
இதையடுத்து அவர் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இன்னும் 10 நாட்கள் பாக்கி இருக்கிறது. இதற்கிடையே நடிகரும் இயக்குநருமான ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.
கார்த்தியின் 29-வது படமான இதன் படப்பிடிப்பு...
ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘சாருகேசி’. இதில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அருண்.ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள், வசனம் பா. விஜய். தேவா இசையமைத்துள்ளார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
விழாவில், ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது, “எனது 75 வயதில் இப்படி ஒரு...
காதல் தோல்வி காரணமாகப் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், ஆனந்த் (அதர்வா). சிறிய மனநோய் பிரச்சினையில் இருக்கும் நாயகி திவ்யாவுக்கு (நிமிஷா சஜயன்) திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களைக் குடும்பங்கள் புறக்கணித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
அவர்களுக்குப் குழந்தைப் பிறக்கிறது. அந்தக் குழந்தையைக் கையில் வாங்கும் திவ்யா, அதை தனது குழந்தை இல்லை என்கிறார். அந்த குழந்தைக்கு என்ன ஆனது, திவ்யாவிடம் இருக்கும் குழந்தை யாருடையது என்பதை...
தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் தனுஷ் பேசியது: “இப்போதெல்லாம் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவதே மெல்ல கேள்விக் குறியாகி வருகிறது. ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் ஆக்ஷன் படங்கள் மட்டுமே மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்ற மாயை நிலவுகிறது. ஆனால் மனித உணர்வுகளும் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை...
தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா நடித்து சூப்பர் ஹிட்டான காமெடி படம், ‘இல்லரிகம்’. டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படம் 1959-ம் ஆண்டு வெளியாகி அங்கு சூப்பர் ஹிட்டானது. இதே கதையை 1961-ம் ஆண்டு ‘சாசுரல்’ என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இதில், ராஜேந்திர குமாரும் சரோஜா தேவியும் நடித்தனர். சரோஜாதேவிக்கு இது 2-வது இந்திப் படம்.
பின்னர், இயக்குநர் எஸ்.கே.ஏ.சாரி, ‘மனே...
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி , ஏற்கெனவே ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘பீனிக்ஸ்’.
வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப்படம் ஆக்ஷன்...
பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’.
அரவிந்தன் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள் ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் , இப்படத்தை ஜூன் 27 -ம் தேதி வெளியிடுகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.பிருத்விராஜ் ராமலிங்கம்...
ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘பன் பட்டர் ஜாம்’. இதை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். ஆத்யா பிரசாத், பாவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ளனர். ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ளார். நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் புரமோஷன் வீடியோவில் இயக்குநர் ராகவ் மிர்தாத், சமீபத்தில் அறிமுகமான வியோ 3 (Veo3 AI) என்ற செயற்கை நுண்ணறிவு...









