விஜய் சேதுபதி மகன் ஹீரோவாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
56

நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி , ஏற்கெனவே ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘பீனிக்ஸ்’.

வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரபல ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப்படம் ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகிறது.

இந்தப் படத்தின் இரண்டாவது பாடல், ‘இந்தா வாங்கிக்கோ’ நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் ஜூலை 4 ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here