பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘டியூட்’. சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்பட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் கதை சொன்னேன். அவர்களுக்கு பிடித்துப் போனதால் உடனே...
என் ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது.
இதனிடையே தனியார் ஊடகம் ஒன்றுக்கு அஜித் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தைம் தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு...
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிக்கல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை ராமர் மேற்கொண்டுள்ளார். பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.
இப்படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் 'முண்டாசுபட்டி' ராமதாஸ், 'நண்டு' ஜகன்,...
தாதா சாகேப் விருது பெற்ற நடிகர் மோகன் லாலுக்கு அக். 4-ம் தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. நடிகர் மோகன் லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது செப்.23-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து மோகன் லாலை கவுரவிக்கும் விதமாக கேரள அரசின் சார்பில் அக். 4-ம் தேதி ‘மலையாளம் வனோலம், லால் சலாம்’ எனும் பெயரில் பாராட்டு...
அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கியுள்ள படம், ‘வீர தமிழச்சி’. இதில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மாரிமுத்து, வேலராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். மகிழினி கலைக்கூடம் சார்பில் சாரதா மணிவண்ணன், மகிழினி இணைந்து தயாரித்துள்ளனர்.
இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்...
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘கந்தாரா: சாப்டர் 1’ படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தபோது, ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் பேசினார். அப்போதுதான் என் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேச முடியும் என்றார். இதற்குத் தெலுங்கு ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தெலுங்கு மொழியைத் தெரிந்துகொண்டே அவர் பேசாமல் சென்றுவிட்டார் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
ஏற்கெனவே பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ பட வெளியீட்டின்...
பிரபாஸ் நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - மூன்றரை நிமிடங்களுக்கு மேல் ஓடியும் கதை இன்னதுதான்...
ரிஷப் ஷெட்டி, இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக். 2-ல் வெளியாகிறது. இதையடுத்து ‘ஜெய் ஹனுமான்’ என்ற படத்தில் நடிக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதை ‘ஹனுமன்’ பிரசாந்த் வர்மா இயக்குகிறார்.
பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ ரிலீஸ் ஆவதை ஒட்டி, ‘ஜெய் ஹனுமான்’ படம் பற்றி...
‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சயின்ஸ் பிக்ஷன் படமான இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
“சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், இந்தப் படம் தயாராகிறது”...
தென்னிந்திய சினிமாவில் 1950- மற்றும் 1960-களில் நன்றாக அறியப்பட்ட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தவர் வி.எஸ்.ராகவன். (நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல). ஏவி.எம் ஸ்டூடியோவில் சவுண்ட் இன்ஜினீயராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சிவாஜி கணேசன், பானுமதி நடித்த ‘கள்வனின் காதலி’ (1955), சாரங்கதாரா (1958), டி.ஆர்.மகாலிங்கம், பானுமதி நடித்த ‘மணிமேகலை’(1959) ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தனது ரேவதி புரொடக்ஷன்ஸ் மூலம் ‘மனிதனும் மிருகமும்’ (1953), ‘மேதாவிகள்’ (1955) ஆகிய படங்களையும்...









