“தயவுசெய்து என்னை மன்னித்துவிடு நண்பா” என்று நடிகர் சூரியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகர் கொட்டாச்சி.
வெற்றி வீரன் மகாலிங்கம் இயக்கத்தில் உருவாகும் ‘பூ காய் கனி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கொட்டாச்சியின் மகள் மானசி நாயகியாக அறிமுகமாகிறார். இந்த விழாவில் இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் மற்றும் கொட்டாச்சி இருவருமே சூரி எந்தவொரு உதவியும் செய்வதில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இது இணையத்தில் வைரலாக பேசப்பட்டது.
இந்த விவகாரம்...
“திமுகவின் தேர்தல் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் இல்லை; இவ்வளவு வாக்குகள் பெற்றதற்குத்தான் அவர் காரணம்” என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் தோற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கலைத் துறையைச் சேர்ந்தவன் ஆயினும், தொடர்ந்து 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவன்...
நடிகை ஸ்ரீலீலா, கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவைக் காதலிப்பதாக வெளியான தகவலை அவர் தாயார் மறுத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் திருப்பதி கோயிலுக்குத் தனது தாயாருடன் சென்று இருந்தார் நடிகை ஸ்ரீலீலா. இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் தனது குடும்பத்தினருடன் அன்று கோயிலுக்குச் சென்றிருந்தார்.
அப்போது அவருடன் ஸ்ரீலீலாவை இணைத்து வந்த செய்தி விவாதத்தை ஏற்படுத்தியது. பின்னர் தர்மசாலாவில் நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஸ்ரீலீலாவின்...
இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் இல்லை: இளையராஜாவிடம் வருத்தம் தெரிவித்த ‘கருப்பு’ படக்குழு
admin - 0
இசை அரசனை காயப்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ‘கருப்பு’ படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது: மதிப்பிற்குரிய இளையராஜா ஐயாவிற்கு. ‘கருப்பு’ திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு. 50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை,...
என் சகோதரி டப்பிங் பணிகளுக்குச் செல்லும் போது அவருடன் நான் துணைக்கு சென்று கொண்டிருந்த காலம் அது. வருடம் நினைவில் இல்லை. அந்த காலகட்டத்தில் சென்னையில் சோழா ஓட்டலுக்கு பின்னால் காதம்பரி, ராம்லீலா என இரண்டு டப்பிங் தியேட்டர்கள் அடுத்தடுத்து இருந்தன.
ராம்லீலா தியேட்டருக்கு அக்காவுடன் சென்றிருக்கும் போது அங்கு நீலக்கலர் வேஷ்டி, ஒரு சட்டை அணிந்து வந்து என் சகோதரி ஹேமமாலினியிடம், “வணக்கம் நான்தான் ராதாரவி” என்று புன்னகையுடன்...
சமீபத்தில் தனியார் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் மாளவிகா மோகனன். அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர், “நீங்கள் விஜய்யுடன் த்ரிஷா மாதிரி பயணிப்பீர்களா ?” என்ற கேள்வியை எழுப்பினார். அப்போதே ‘இது தேவையற்ற கேள்வி’ என்று மாளவிகா மோகனன் தெரிவித்துவிட்டார்.
இந்த வீடியோ பதிவானது இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக மாளவிகா மோகனன் தனது எக்ஸ் தள பதிவில், “சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். தமிழகத்தைச் சேர்ந்த...
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், முதல் மூன்று நாட்களிலேயே உலகளவில் ரூ.147 கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இத்திரைப்படம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ‘வீரபத்ருடு’ என்ற பெயரில் வெளியானது.
இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் ரூ.80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், வெளிநாடுகளில்...
தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருபவர் முத்துக்காளை. இவர் மனைவி மாலதி (47), மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு மூச்சுவிடச் சிரமம் ஏற்பட்டது.
நினைவில்லாமல் இருந்த அவருடைய மேல் சிகிச்சைக்காக முதல்வர் விஜய் உதவ வேண்டும் என முத்துக்காளை சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைத்தார்....
'தாய் கிழவி' படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் அடுத்து இயக்கும் சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இதை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பாக்ய ஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு மதுரை அருகே நேற்று தொடங்கியது. கமல்ஹாசன் படப்பிடிப்பை தொடங்கி வைத்து, படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன்...
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை...









