Google search engine
 ‘சித்தா' படத்தின் வெற்றிக்கு பிறகு சித்தார்த் ஹீரோவாக நடிக்கும் படம், ‘மிஸ் யூ'. இதை 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மாப்ள சிங்கம்’, 'களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் இயக்குகிறார். காதல்,...
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெளியிட்ட சுயாதீன இசை ஆல்பம் ‘இனிமேல்' வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டெகாயிட்' என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘இந்தியன் 2' பாடல் வெளியீட்டு விழாவில், அவர் தந்தை கமல்ஹாசனை கொண்டாடும் விதமாக அவரது ஹிட் பாடல்களைத் தொகுத்து இசை நடன நிகழ்வை அரங்கேற்றியிருந்தார். இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘என் தந்தையின் திரை வாழ்வை கவுரவப்படுத்துவது எனக்கு கிடைத்த...
ஹன்சிகா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம், ‘காந்தாரி’. ஆர். கண்ணன் தயாரித்து இயக்கியுள்ளார். மெட்ரோ சிரிஷ் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.முத்து கணேஷ் இசை அமைத்துள்ள இதன் திரைக்கதையை தயாரிப்பாளர் தனஞ்செயன் எழுதியுள்ளார். எமோஷனல் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இதன் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. விழாவில் தனஞ்செயன் பேசும்போது, “நரிக்குறவர் வாழ்க்கை முறை பின்னணியில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நானும் எனது குழுவில்...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித்துள்ளன. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. தயாரிப்பாளர் சுபாஷ்கரன், கமல்ஹாசன், ஷங்கர், இயக்குநர்கள் வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உட்பட பலர்...
போதைப் பொருள் கடத்தல் குறித்து விசாரித்து வருகிறார் போலீஸ் அதிகாரி ஹன்ஸா ரஹ்மான் (ஜெயக்குமார்). கல்லறையில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைப்பதாகக் கிடைக்கும் தகவலை அடுத்து ரகசியமாகக் கண்காணிக்கச் செல்லும்போது, சாத்தானை வழிபடும் குழு, விசித்திர பூஜை செய்து நரபலி கொடுப்பதை அறிகிறார். அவர்கள் யார், எதற்காக அந்த வழிபாடு, அவர்களைக் கண்டுபிடித்தார்களா? என்பதைப் புரிந்தும் புரியாமலும் சுற்றி வளைத்துச் சொல்கிறது படம். நம்பிக்கைகளின் அடிப்படையில் மனித குழுக்கள் பல்வேறு...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கிருத்திகா உதயநிதி. இவர் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘பேப்பர் ராக்கெட்’ வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன்,...
ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஊர்வசி ரவுதெலாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுதெலா, தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏராளமான ஆல்பம் பாடல்களிலும் தோன்றியுள்ளார். இந்த நிலையில் நேற்று (பிப்.25) ஊர்வசி ரவுதெலா தனது...
பிரபாஸ், கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் இருந்து தொடங்கி 2898-ல் முடிகிறது என்று அப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான்...
நாகர்கோவில் அருகிலுள்ள அறுகு விளையில் நூறாண்டுகளாக நடந்துவருகிறது புறா பந்தயம். அதில் ராஜலிங்கத்தின் (சையத் மஜீத்) குடும்பமும் ஒன்று. இந்தப் புறா பந்தயத்தால் வாழ்க்கை நாசமாவதாக நினைக்கும் அவரின் அம்மா சரஸ்வதி (விஜி சேகர்),லிங்கத்தைப் படிக்க வைத்து அதிலிருந்து திசைத் திருப்ப நினைக்கிறார். ஆனால், அம்மாவை ஏமாற்றிவிட்டு புறா பந்தயத்தில் மனதைச் செலுத்துகிறார் லிங்கம். இந்தப் பந்தய புறா வாழ்க்கை, அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் என்ன மாதிரியான வில்லங்கங்களை...
 உலகப் புகழ் பெற்ற ‘நரூட்டோ’ அனிமேஷன் தொடரை முழுநீள லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை லயன்ஸ்கேட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் கதைகளில் புகழ்பெற்றது ‘நரூட்டோ’. மசாஷி கிஷிமோட்டோ என்பவர் உருவாக்கிய இந்த காமிக்ஸ் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 கோடிக்கும் அதிகமாக பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இது தொலைகாட்சி தொடராகவும் 220 எபிசோடுகளாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தியாவிலும்...